ஜெயக்குமார் ஆடியோ! பதிலடி உறுதி! வெற்றிவேல் மீது செம டென்சனில் ஜெயவர்தன்!

By vinoth kumarFirst Published Oct 23, 2018, 9:47 AM IST
Highlights

ஜெயக்குமார் ஆடியோ என்று சமூக வலைதளங்களில் வைரல் ஆகிக் கொண்டிருக்கும் போன் உரையாடல் விவகாரத்தில் டி.டி.வி ஆதரவாளர் தினகரன் மீது ஜெயக்குமாரின் மகனும் எம்.பியுமான ஜெயவர்தன் செம டென்சனில் உள்ளார்.

ஜெயக்குமார் ஆடியோ என்று சமூக வலைதளங்களில் வைரல் ஆகிக் கொண்டிருக்கும் போன் உரையாடல் விவகாரத்தில் டி.டி.வி ஆதரவாளர் தினகரன் மீது ஜெயக்குமாரின் மகனும் எம்.பியுமான ஜெயவர்தன் செம டென்சனில் உள்ளார். இரண்டு வாரங்களுக்கு முன்னர் சன் நியுஸ் தொலைக்காட்சிக்கு வெற்றிவேல் ஒரு பேட்டி கொடுத்திருந்தார். அந்த பேட்டியின் போது தான் அ.தி.மு.க எம்.பி ஒருவருக்கு தம்பி பாப்பா பிறந்திருப்பதாக வெற்றிவேல் கூறியிருந்தார். அன்று முதலே எந்த எம்.பிக்கு தம்பி பாப்பா பிறந்துள்ளது என்று சமூக வலைதளங்களில் விவாதம் நடைபெற்றது.

 

ஆனால் பேட்டியின் போதே தம்பி பாப்பா பிறந்துள்ளது ஜெயவர்தனின் அப்பா ஜெயக்குமாருக்கு தான் என்று சில ஹின்டுகளையும் வெற்றிவேல் கொடுத்திருந்தார். அன்று முதலே இப்போது வெளியிடப்போகிறோம், நாளை வெளியிடப்போகிறோம் என்று ஆடியோவை வைத்துக் கொண்டு தினகரன் தரப்பு பயமுறுத்திக் கொண்டே இருந்தது. ஆனால் இதைப்பற்றி எல்லாம் சிறிது கூட கவலைப்படாமல் ஜெயக்குமார் தனது வேலைகளில் தீவிரம் காட்டி வந்தார். இந்த நிலையில் தான் பிரபல வார இதழ் பத்திரிகைகளை வெற்றிவேல் தரப்பு நாடியுள்ளது. 

2 நிமிடங்கள் ஓடக்கூடிய ஆடியோ ஒன்றை கொடுத்து வெளியிடுமாறு அந்த பத்திரிகைகளிடம் வெற்றிவேல் தரப்பு பேச்சு நடத்தியதாக கூறப்படுகிறது. ஆனால் உரையாடலில் பேசும் பெண்மணி பாதிக்கப்பட்ட அபலைப் பெண் போல் பேசாமல் செட்டில்மென்ட் பற்றியே பேசியதால் உள்நோக்கத்துடன் வெற்றிவேல் தரப்பு தங்களை அணுகுவதாக கருதி அது தொடர்பாக செய்தியை வெளியிடாமல் புலனாய்வு ஊடகங்கள் மறுத்துவிட்டன. தொலைக்காட்சிகளுக்கு நேரடியாக கொடுத்தால் யார் மூலம் கிடைத்தது என்கிற தகவலை ஜெயக்குமார் எளிதாக பெற்றுவிடுவார் என்பதாலும் பல்வேறு தொலைக்காட்சிகளும் ஜெயக்குமார் ஆடியோவை வெளியிட தயாராக இல்லை என்பதையும் வெற்றிவேல் தரப்பு தாமதமாகவே தெரிந்து கொண்டது. 

இதனால் தான் வேறு வழியே இல்லாமல் ஜெயக்குமார் ஆடியோவை வெற்றிவேல் தரப்பு சமூக வலைதளங்களில் வெளியிட்டது. ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியான பிறகு முன்னணி ஊடகங்கள் அது குறித்து செய்தி வெளியிடும் என்று வெற்றிவேல் தரப்பு எண்ணியது. ஆனால் ஜெயா டிவி தவிர வேறு எந்த தொலைக்காட்சியும் ஆடியோவை கண்டுகொள்ளவில்லை. கலைஞர் தொலைக்காட்சியில் கூட ஜெயக்குமார் பெயருடன் கூடிய பர்த் செர்டிபிகேட் செய்தியை மட்டுமே ஒளிபரப்பியது. மற்ற ஊடகங்கள் ஆடியோவை வெளியிடாததற்கு ஜெயக்குமார் பர்சனலாக ஊடக அதிபர்களை தொடர்பு கொண்டு பேசியதும் ஒரு காரணம் என்று சொல்லப்படுகிறது. 

இந்த நிலையில் தான் தனது தந்தையின் பெயரை டேமேஜ்  செய்வதாக கூறிக் கொண்டு விவகாரத்தில் தனக்கு தம்பி பாப்பா பிறந்துள்ளதாக வெற்றிவேல் மீண்டும் மீண்டும் கூறி வருவது ஜெயவர்த்தனுக்கு செம எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பெண் ஒருவரை பயன்படுத்தி அரசியல் விளையாட்டை ஆடி வரும் வெற்றிவேலுக்கு தகுந்த பதிலடி கொடுக்க ஜெயவர்தன் துடித்துக் கொண்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

click me!