
ஜசோதா பென் என் மனைவி என குறிப்பிட்ட பிரதமர் ...! மோடி திருமணம் ஆகாதவர் என தெரிவித்த ஆனந்தி பென் பட்டேல்...!
நரேந்திர மோடி திருமணம் ஆகாதவர் என மத்திய பிரதேச மாநில கவர்னர் ஆனந்தி பென் பட்டேல் தெரிவித்துள்ள கருத்தால் பெரும் சர்ச்சை கிளம்பி உள்ளது
பிரதமர் நரேந்திர மோடி, குஜராத் மாநில முதல்வராக இருந்த போது அவர் பதவியில் இருந்து விலகி பிரதமரானார்.
அப்போது பிரதமர் நரேந்திர மோடியை பற்றியும், அவருடைய செயல்பாடுகள் பற்றியும் மிக அருமையாக ஊழியர்களுக்கு எடுத்துரைத்து உள்ளார்.
எந்தெந்த திட்டங்கள் கொண்டுவரப்பட்டது எதற்காக கொண்டுவரப் பட்டது... அதுனுடைய நன்மைகள் என்ன..? பிரதமர் செய்த சாதனைகள் என ஒரு பட்டியல் போட்டு புகழ்ந்து தள்ளி விட்டுள்ளார்.
அவர் திருமணம் ஆகாதவர் என்றாலும், பெண்கள் மற்றும் குழந்தைகள் பிரச்சனைகள் பற்றி நன்கு அறிந்தவர் என தெரிவித்து உள்ளார்
அதே போன்று குழந்தைகள் பிறப்பதற்கு முன்பும், பிறந்த பின் ஏற்படும் தேவைகளை பற்றியும் நன்கு அறிந்தவர் பிரதமர் என அவர் தெரிவித்து இருந்தார்.
ஆனால் 2014 ஆம் ஆண்டு நடைப்பெற்ற பாராளுமன்ற தேர்தலின் போது கூட வேட்பு மனுவில் ஜசோதா பென் தன் மனைவி என குறிப்பிட்டு இருந்தார் மோடி என்பது குறிப்பிடத்தக்கது.