மோடி மனைவிக்காக பிரார்த்தனை செய்யும் காங்கிரஸ்!

Asianet News Tamil  
Published : Feb 07, 2018, 04:09 PM ISTUpdated : Sep 19, 2018, 01:55 AM IST
மோடி மனைவிக்காக பிரார்த்தனை செய்யும் காங்கிரஸ்!

சுருக்கம்

Jasoda Ben to come back with perfect health!

பிரதமரின் மனைவி ஜசோதா பென் அவர் பூரண நலத்துடன் மீண்டும் வர வேண்டும் என்றும் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு கூறியுள்ளார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள சித்தோர்கர் என்ற இடத்தில், பிரதமர் மோடியின் மனைவி ஜசோதா பென் மற்றும் இரண்டு பெண்கள், கமாண்டோ ஒருவர் பயணம் செய்து உள்ளனர். அப்போது, சாலையில் சென்று கொண்டிருந்த ட்ரக் மீது, இவர்கள் சென்ற கார் மோதிய பயங்கரமாக மோதியுள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே கார் டிரைவர் பசந்த் உயிரிழந்தார். இந்த விபத்து இன்று காலை 10 மணியளவில் நடைபெற்றது.

இந்த விபத்தில் பிரதமர் மோடியின் மனைவி சிறு காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். மேலும், உடன் சென்ற இரண்டு பெண்கள் கமாண்டோவுக்கும் காயம் ஏற்பட்டது. இதையடுத்து, அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பலத்த காயமடைந்த கமாண்டோ, அபாயகரமான கட்டத்தில் உள்ளதாக மருத்துவமனை வட்டாரம் தெரிவித்துள்ளது. லாரி ஓட்டுநர் திடீரென ப்ரேக் போட்டதால், இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிரதமரின் மனைவி ஜசோதா பென் விரைவில் நலம்பெற வேண்டும் என பல்வேறு தரப்பினர் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் குஷ்பு, தனது டுவிட்டர் பக்கத்தில், பிரதமர் மோடியின் மனைவி ஜசோதா பெண் விரைந்து நலம்பெற விரும்புவதாக பதிவிட்டுள்ளார்.

குஷ்பு டுவிட்டரில், “பிரதமரின் மனைவி ஜசோதாபென் சென்ற வாகனம் விபத்துக்குள்ளானது தொடர்பாக கேள்விப்பட்டு வருத்தமடைந்தேன். அவர் தற்போது நலமாக இருப்பதாகவே எண்ணுகிறேன். விரைந்து அவர் பூரண நலத்துடன், மீண்டும் வரவேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

விஜய் மட்டுமே முழு காரணம்.. கரூரை மீண்டும் கையிலெடுத்த திமுக.. கடுமையான விமர்சனம்!
திமுக ஆட்சியில் தலைதூக்கிய துப்பாக்கி கலாசாரம்.. போட்டுத் தாக்கிய அதிமுக!