ஜார்கண்ட் தேர்தல் தேதி அறிவிப்பு !! மாற்றுத் திறனாளிகள், முதியோர்களுக்கு புதிய வசதி…தேர்தல் ஆணையம் அதிரடி !!

By Selvanayagam PFirst Published Nov 1, 2019, 10:22 PM IST
Highlights

ஜார்கண்ட் மாநில சட்டப்பேரவைக்கு நவம்பர் 30-ம் தேதி தொடங்கி 5கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் நாட்டிலேயே முதன் முறையாக மாற்றுத் திறனாளிகள் மற்றும் முதியவர்களுக்கு புதிய வசதி செய்யப்பட்டுள்ளது.
 

ஜார்கண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம்  இன்று அறிவித்துள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் மொத்தம் 81 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. அங்கு முதல்வராக பாஜகவைச் சேர்ந்த ரகுபர் தாஸ் தலைமையில் ஆட்சி நடைபெறுகிறது. இதன் ஆட்சிக்காலம் முடிவடையவுள்ளதை தொடர்ந்து சட்டப்பேரவை தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இங்கு   5 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. 

நவம்பர் 30-ம் தேதி நடக்கும் முதல்கட்ட தேர்தலில் 13 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடக்கிறது. டிசம்பர் 7-ம் தேதி நடக்கும் 2-ம் கட்ட வாக்குப் பதிவில் 20 தொகுதிகளுக்கும், டிசம்பர் 12-ம் தேதி நடைபெறும் 3-ம் கட்ட வாக்குப் பதிவில் 17 தொகுதிகளுக்கும், டிசம்பர் 16-ல் நடக்க 4-ம் கட்ட வாக்குப் பதிவில் 15 தொகுதிகளுக்கும், டிசம்பர் 20-ம் தேதி இறுதிக்கட்ட வாக்குப்பதிவில் 16 தொகுதிகளுக்கும் தேர்தல் நடக்கிறு. டிசம்பர் 23-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது

நவம்பர் 13-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள். வேட்புமனு பரிசீலனை நவம்பர் 14-ம் தேதி நடைபெறும். நாட்டிலேயே முதல்முறையாக மாற்றுத்திறனாளிகள், முதியோர்களுக்கு தபால்மூலம் வாக்களிக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் . 2020-ம் ஆண்டு நடக்கும் டெல்லி தேர்தலில் இதே நடைமுறை தொடரும்.கடந்த மக்களவைத் தேர்தலில், ஜார்க்கண்டில் காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைத்தன. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா(ஜேஎம்எம்), ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா(ஜேவிஎம்), லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) மற்றும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) ஆகியவை காங்கிரஸ் தலைமையில் இணைந்து தேர்தலைச் சந்தித்தன. எனினும் அந்தக் கூட்டணி தோல்வியைச் சந்தித்தது.

வரும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் இந்தக் கட்சிகள் கூட்டணி அமைத்துப் போட்டியிடுவது குறித்து பேச்சவார்த்தை நடத்தி வருகின்றன. அங்கு ஜார்கண்ட் மாணவர் சங்கம் உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து ஆட்சி நடத்தி வரும் பாஜக மீண்டும் ஆட்சியை கைப்பற்றி முயற்சி மேற்கொண்டு வருகிறது. 

click me!