பிறந்த நாளை, நினைவு நாளாக்கிய அதிமுகவினர்! கொதித்தெழுந்த எடப்பாடி! கதிகலங்கிய தொண்டர்கள்!

First Published Jan 13, 2018, 4:57 PM IST
Highlights
January 17 is the birthday of MGR? Memorial Day?


முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 101-வது பிறந்த நாள் விழா என்று குறிப்பிடுவதற்கு பதிலாக 101-வது நினைவு நாள் என்று போஸ்டர்கள், பேனர்கள் ஒட்டப்பட்டிருப்பது பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. தஞ்சையில், அமைச்சர் துரைக்கண்ணு மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் வைத்தியலிங்கம் தரப்பில் இந்த போஸ்டர்களும், பேனர்களும் வைக்கப்பட்டுள்ளன.

தமிழக முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் பிறந்த நாள் வரும் 17 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. எம்.ஜி.ஆரின்  நூற்றாண்டு விழாவையொட்டி, தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் நூற்றாண்டு விழாக்கள் கொண்டாடப்பட்டு வருகிறது.

எம்.ஜி.ஆரின் 101-வது பிறந்த நாள் விழா கொண்டாட இன்னும் 2 நாட்களே உள்ளன. இந்த நிலையில், தமிழகம் முழுவதும் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா கொண்டாட்டத்துக்கு அதிமுகவினர் தங்களை தயார்படுத்தி வருகின்றனர்.

அதிமுக சார்பில் கொண்டாடப்படும், எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்கான பொறுப்புகளை அந்தந்த மாவட்டங்களைச் சேட்ரந்த அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களிடம் கொடுக்கப்பட்டது.

அந்த வகையில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் பேனர்களில் ஜெயலலிதாவின் புகைப்படம் இடம் பெறாமல் இருந்தது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் மீண்டும் ஒரு சர்ச்சையை அதிமுக அமைச்சர்களால் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தஞ்சையில், எம்.ஜி.ஆரின் 101-வது பிறந்தநாள் விழாவை கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளை, ஆர்.வைத்திலிங்கம் எம்.பி. மற்றும் இரா துரைக்கண்ணு சார்பில் செய்யப்பட்டு வருகிறது. எம்.ஜி.ஆர் பிறந்த நாளையொடி, போஸ்டர்களும் பேனர்களும் தஞ்சையில் வைக்கப்பட்டுள்ளன.

எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா கொண்டாட்டம் அதிமுகவினரால் களைகட்டி வரும் நிலையில், போஸ்டரில் எம்.ஜி.ஆரின் பிறந்த நாள் என்பதற்கு பதிலாக நினைவு நாள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது அதிமுகவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. 

click me!