“வெற்றி…!!! வெற்றி…!!!” மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கும் – அமைச்சர் அனில்மாதவ் தவே “உறுதி”

 
Published : Jan 20, 2017, 01:27 PM ISTUpdated : Sep 19, 2018, 03:00 AM IST
“வெற்றி…!!! வெற்றி…!!!” மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கும் – அமைச்சர் அனில்மாதவ் தவே “உறுதி”

சுருக்கம்

தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என வலியுறுத்தி லட்சக்கணக்கானோர் அறப்போராட்டம் நடத்தி வருகின்றனர். இதைதொடர்ந்து, முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், நேற்று டெல்லியில் பிரதமரை சந்தித்து, ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் இயற்ற வேண்டும் என பேசினார். ஆனால், அந்த பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.

இதனால், மாநிலம் முழுவதும் போராட்டம் தீவிரம் அடைந்தது. இதையடுத்து நாடாளுமன்ற அதிமுக உறுப்பினர்கள், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை இன்று சந்தித்து, ஜல்லிக்கட்டு போட்டி நடத்த வேண்டும் என கோரிக்கை மனு கொடுத்தனர்.

இந்நிலையில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் அனில்மாதவ் தவே செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது:-

ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்கிறோம். விரைவில் வரைவு மசோதா மீதான பரிசீலனை முடிந்துவிடும். ஜல்லிக்கட்டு விவகாரத்தில் மத்திய அரசு உறுதியான முடிவு எடுத்து வருகிறது. அவசர கதியில் முடிவுகளை எடுத்து தவறான செயலில் ஈடுபட்டுவிட கூடாது என்பதில் என்பதில் உறுதியாக இருக்கிறேம்.

ஜல்லிக்கட்டு குறித்த வரைவு மசோதா இன்றுதான் கிடைத்தது. இன்று அல்லது நாளை ஜல்லிக்கட்டு பிச்சனை முடிவுக்கு வரும். தமிழர்களின் பாரம்பரிய ஜில்லிக்கட்டு விவகாரத்துக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்பதையே நாங்கள் விரும்புகிறம. தமிழக பாரம்பரியத்தை காக்க முக்கியத்துவம் அளிக்கப்படும். பல நூற்றாண்டு பழமை மிக்கது ஜல்லிக்கட்டு என்பதை மத்திய அரசு அறிந்துள்ளது.

தற்போது ஜல்லிக்கட்டுக்கு ஒப்புதல் அளித்துவிட்டதாக பேசப்படுகிறது. ஆனால், மத்திய உள்துறை அமைச்சரகம் ஒப்புதல் அளித்துவிட்டதாக இதுவரை எங்களுக்கு எந்த தகவலும் வரவில்லை. அவசர சட்டம் குறித்து உள்துரை அமைச்சகம் பரிசீலனை செய்து கொண்டு உள்ளது என்பது மட்டுமே எங்களுக்கு கிடைத்த தகவல். தமிழக மக்களுக்கு நிச்சயம் நல்ல செய்தி கிடைக்கும். நாளை கலைக்குள் நல்ல முடிவு கிடைத்துவிடும்

இவ்வாறு அவர் கூறினார்.

PREV
click me!

Recommended Stories

நான் காமராஜரை பற்றி பேசியதை வதந்தி பரப்புகிறார்கள்..! மன்னிப்புக்கேட்ட முக்தார்..!
திமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் காணாமல் போய்விடுவார்கள்..! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கொக்கரிப்பு