
ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்கள் தொடங்கிய என் தேசம்,,என் உரிமை கட்சி…ஆன்லைன் மூலம் ஒரே நாளில் இணைந்த 6 லட்சம் பேர்…
சென்னையில் நேற்று முன்தினம் புதிதாக தொடங்கப்பட்ட என் தேசம் என் உரிமை கட்சியில் ஆன்லைன் மூலமாக 6 லட்சம் பேர் இணைந்தனர். இது குறித்த தகவலை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் எபினேசர் தெரிவித்தார். முதல் கட்டமாக ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தெரிவித்துள்ளர்.
ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு உச்சநீதிமன்றம் தடைவிதித்தபோது அதனை மீட்பதற்காக தமிழகத்தில் பெரும் போராட்டம் நடைபெற்றது.
இஞைர்கள், மாணவர்கள் இணைந்து முன்னெத்த இந்த அறப்போராட்டம் உலகையே திரும்பி பார்க்க வைத்தது.
இவர்களின் இந்த போராட்டத்தால் அஞ்சிய மத்திய,மாநில அரசுகள் உடனடியாக அவசரச் சட்டம் இயற்றி ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கியது.
இந்நிலையில்ஜல்லிக்கட்டு போராட்டத்தல் ஈடுபட்ட ஒரு பிரிவினர்
சென்னையில் நேற்று முன்தினம் என் தேசம் என் உரிமை என்ற புதிய கட்சியை உருவாக்கினர்.
தற்போது அவர்கள் கட்சியின் உறுப்பினர் சேர்க்கை பணியை மேற்கொண்டுள்ளனர். பேஸ்புக், வாட்ஸ் அப், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மூலம் உறுப்பினர் சேர்க்கையை தொடங்கியுள்ளனர்.
கட்சி தொடங்கிய முதல் நாளிலேயே ஆன்லைன் மூலம் 6 லட்சம் பேர் இணைந்துள்ளனர்.
இளைஞர்கள், மாணவர்கள் நினைத்தால் சமூக மாற்றத்தை தமிழகத்தில் கொண்டுவரமுடியும் என்பதில் உறுதியாக உள்ள நாங்கள், உள்ளாட்சி தேர்தலிலும், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலிலும் போட்டியிடுவோம் என தெரிவித்தனர்.
அரசியல்வாதிகள், நடிகர்கள், பிரபலங்கள் போன்றோரின் ஆதரவு தேவை இந்லை என அவர்கள் திட்டவட்டமாக தெரிவித்தனர்.