'ஜல்லிக்கட்டுக்கு மாநில அரசு விரைவில் நடவடிக்கை எடுக்கும்' - டெல்லியில் ஓபிஎஸ் பேட்டி

 
Published : Jan 19, 2017, 12:55 PM ISTUpdated : Sep 19, 2018, 03:00 AM IST
'ஜல்லிக்கட்டுக்கு மாநில அரசு விரைவில் நடவடிக்கை எடுக்கும்' - டெல்லியில் ஓபிஎஸ் பேட்டி

சுருக்கம்

வழக்கு உச்சநீதிமன்றத்தில் இருப்பதால் தாங்கள் எதுவும் செய்ய முடியாது, ஆனால் ஜல்லிக்கட்டு தொடர்பாக மாநில அரசின் நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு துணை நிற்கும் , என்று மத்திய அரசு கூறியுள்ளதால் விரைவில் அது தொடர்பான நடவடிக்கை அறிவிப்பேன் என்று முதல்வர் ஓபிஎஸ் டெல்லியில் தெரிவித்துள்ளார்.

இது பற்றி டெல்லியில் அவரது பேட்டி:

தமிழகத்தின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு இருக்கின்ற தடையை நீக்க  மத்திய அரசு அவசர சட்டத்தை கொண்டுவர வேண்டும் என்பதை பிரதமருக்கு சந்திக்க கேட்டிருந்தேன், பொதுச்செயலாளரும் கேட்டிருந்தார்.  தமிழகத்தில் ஓராண்டு பெய்ய வேண்டிய இரு பருவ மழையும் பொய்த்து போனதால் கடுமையான வறட்சி ஏற்பட்டதையும் , வறட்சி நிவாரண 39,565 கோடி ரூபாய் எனபாதை அறிவித்து அதற்கான அறிக்கை தயார் செய்யப்பட்டு பிரதமருக்கு வருவாய் துறை மூலம் அளிக்கப்பட்டது. 

இதையெல்லாம் முன் வைத்து தான் பிரதமரை சந்தித்தோம். தமிழகத்தில் தடை செய்யப்பட்டுள்ள ஜல்லிக்கட்டை மீண்டும் நடத்த கூடிய சட்டத்திருத்ததை கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தினேன், அவசர சட்டத்தை கொண்டுவரவேண்டும் என வலியுறுத்தினேன்.

பிரதமர் பரிவுடன் கருத்துக்களை கேட்டார். தமிழ் நாட்டின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதாக தெரிவித்தார். நான் அனைத்தும் அறிவேன் என்று தெரிவித்தார். உச்சநீதிமன்றம் இன்னும் தீர்ப்பை வழங்க வில்லை எனவே மாநில அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு  மத்திய அரசு துணை நிற்கும் என்று தெரிவித்தார்.

இது பற்றி மாநில அரசின் நடவடிக்கை குறித்து ஆலோசித்து விரைவில் அறிவிப்பேன். நன்மையே யாவும் நன்மையாய் முடியும். இவ்வாறு தெரிவித்தார்.

தமிழ்நாட்டின் வறட்சி பற்றி முழுமையாக எடுத்து கூறினேன் வறட்சி நிவாரணம் விரைவில்  தருவதாக கூறியுள்ளார்.

ஜல்லிக்கட்டு விவகாரத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக இதைத்தானே மத்திய அரசு சொல்கிறது. 

பொறுமையாக இருங்கள் நல்லவை நடக்கும். இவ்வாறு பேட்டி அளித்தார்.

PREV
click me!

Recommended Stories

விஜய் வாக்குகளால் கதிகலங்கும் திமுக..! கடைசியில் கனிமொழியை நம்பி இருக்கும் மு.க.ஸ்டாலின்..!
பணத்தை பெரிதாக நினைக்காமல் தியாக வாழ்க்கை வாழும் ஸ்டாலின்- உதயநிதி..! நெஞ்சு புடைக்க புகழும் கருணாஸ்..!