திமுகவில் தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட அனைவரும் கட்சிக்கு ஒற்றைத் தலைமை வேண்டும் எனக் கேட்டுள்ளனர். தேனி மாவட்ட அதிமுகவினர் 99 சதவீதம் பேர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக உள்ளதாகவும், தமிழக முழுவதும் 100% அதிமுகவினர் எடப்பாடி பழனிசாமியின் தலைமையை விரும்புவதாகவும் கூறினார்.
வரும் 11-ம் தேதி பொதுக்குழு திட்டமிட்டபடி நடைபெறும். அந்தப் பொதுக்குழுவில் அதிமுகவின் ஒற்றைத் தலைமையாக எடப்பாடி பழனிசாமி அதிகாரப்பூர்வமாக ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்படுவார் என ஜக்கையன் கூறியுள்ளார்.
தேனி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் புதுப்பட்டியில் நடைபெற்றது. இதற்கு அக்கட்சியின் அமைப்பு செயலாளர் எஸ்.டி.கே.ஜக்கையன் தலைமை வகித்தார். இதில் பெரியகுளம், போடி, ஆண்டிப்பட்டி, கம்பம் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த 150க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்போது, எடப்பாடி பழனிச்சாமி ஒற்றைத் தலைமையாக வரவேண்டும் என்றும் பன்னீர்செல்வத்தை கண்டித்தும் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.
இதையும் படிங்க;- டுவிட்டர் பக்கத்தில் தனது அதிமுக பொறுப்பை மாற்றினார் எடப்பாடி பழனிசாமி.. !
இதில், அதிமுக மாவட்ட பொருளாளர் சோலைராஜ், முன்னாள் ஒன்றிய செயலாளர் இளையநம்பி, தற்போதைய ஒன்றிய கவுன்சிலர்கள், கூட்டுறவு சங்கத் தலைவர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள், கிளை செயலாளர்கள் என 150க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். குறிப்பாக ஆண்டிபட்டி பேரூராட்சியில் உள்ள 24 வார்டு செயலாளர்களில் 21 வார்டு செயலாளர்களும், ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 3 யூனியன் கவுன்சிலர்களும் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க;- AIADMK: ஓபிஎஸ் கொள்ளையடித்த பணம் புதுச்சேரியில் இருக்கு.. அதிமுக பிரமுகர் சொன்ன அதிர்ச்சி தகவல்
இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஜக்கையன்;- அதிமுகவில் தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட அனைவரும் கட்சிக்கு ஒற்றைத் தலைமை வேண்டும் எனக் கேட்டுள்ளனர். தேனி மாவட்ட அதிமுகவினர் 99 சதவீதம் பேர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக உள்ளதாகவும், தமிழக முழுவதும் 100% அதிமுகவினர் எடப்பாடி பழனிசாமியின் தலைமையை விரும்புவதாகவும் கூறினார். மேலும், இதில் எவ்வித குழப்பமும் இல்லை. எவ்வித சட்டச்சிக்கலும் இல்லை. வரும் 11-ம் தேதி பொதுக்குழு திட்டமிட்டபடி நடைபெறும். அந்தப் பொதுக்குழுவில் அதிமுகவின் ஒற்றைத் தலைமையாக எடப்பாடி பழனிசாமி அதிகாரப்பூர்வமாக ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்படுவார். எடப்பாடி பழனிசாமி விரைவில் தலைமைப்பொறுப்பை ஏற்பார் என்றார். ஓபிஎஸ் சொந்த மாவட்டத்திலேயே அவருக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது அந்த அரங்கு முன்பாக வந்த ஓபிஎஸ் ஆதரவாளர்கள் 8 பேர் துரோகி எடப்பாடி பழனிச்சாமி ஒழிக என்று கோசமிட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.