நாற்பது தொகுதி வெற்றி எங்க கையிலதான் பாஸு..! கொஞ்சம் கூட கூச்சமில்லாமல் காலரை தூக்கும் சசி மருமவன்...!

By Vishnu PriyaFirst Published Dec 26, 2019, 6:39 PM IST
Highlights

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அ.ம.மு.க.வானது அ.தி.மு.க.வின் வாக்குகளை ஓரளவு பிரித்ததால் தி.மு.க. அணி எளிதில் வென்றது. அதேபோல், இந்த உள்ளாட்சி தேர்தலிலும் தினகரனை களமிறங்க சொல்லி வர்புறுத்தியிருக்கிறாராம் ஸ்டாலின். 

நாற்பது தொகுதி வெற்றி எங்க கையிலதான் பாஸு..! கொஞ்சம் கூட கூச்சமில்லாமல் காலரை தூக்கும் சசி மருமவன்...! 

அ.தி.மு.க.விலிருந்து பிரிந்த கட்சிகள் எத்தனை, அவை எவை? என்கிற ஒன் மார்க் கொஸ்டீனுக்கு, உங்களுடைய பதிலானது ‘ஒரு கட்சி! அது அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்!’ என்றிருந்தால்,  நீங்க ஃபெயிலு. ஆமாங்க, மத்திய மட்டுமல்ல சர்வதேச உளவுத்துறையின் ரிப்போர்ட்டின் படி அ.தி.மு.க.விலிருந்து பிரிந்த கட்சிகளின் எண்ணிக்கை மொத்தம் நான்கு. 

ஒன்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்! எனும் தினகரனின் அ.ம.மு.க. ரெண்டு, அண்ணா திராவிடர் கழகம்! எனும் திவாகரனின் அ.தி.க. மூன்றாவது, அம்மா தீபா பேரவை! எனும் தீபாவின் அ.தீ.பே. இது போக தீபாவின் கணவரான நம்ம மாதுக்குட்டியும் (மாதவன்) ஒரு பேரவையை துவக்கியது. ஆனால் அதன் பெயர் என்னவென்பது இந்நேரம் மாதுக்குட்டிக்கே மறந்திருக்குமென்பதால் அதைப் பற்றி நாம் சொல்வது அவ்வளவு உசித்தமானதில்லை. ஆக இப்படி நான்காக (ஓவருல்ல) பிளவு கொண்டிருந்தாலும் கூட இதில் தினகரனின் அ.ம.மு.க.தான் வைபரெண்டாக இருந்தது. எக்கச்சக்க தேர்தல்களில், எக்கச்சக்க தொகுதிகளில் நின்று ஆர்.கே.நகர் எனும் ஒத்த தொகுதியில் மட்டும் ஜெயித்தது. அதன் பின் அக்கட்சி சுதி இழந்து கிடக்கிறது. 

இந்நிலையில்,  கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அ.ம.மு.க.வானது அ.தி.மு.க.வின் வாக்குகளை ஓரளவு பிரித்ததால் தி.மு.க. அணி எளிதில் வென்றது. அதேபோல், இந்த உள்ளாட்சி தேர்தலிலும் தினகரனை களமிறங்க சொல்லி வர்புறுத்தியிருக்கிறாராம் ஸ்டாலின். தினா யோசித்துக் கொண்டிருக்க, ‘ஹல்லோ, நாங்களும் களத்துல இருக்குறோம் பாஸ். எங்களாலேயும் அ.தி.மு.க.வின் வாக்கு வங்கியை பிரிக்க முடியும்.’என்று ஒரு  இளம் குரல் கிளம்பியிருக்கிறது. 

அது யார் தெரியுமா? சசிகலாவின் மருகனும், சசியின் தம்பி திவாகரனின் மகனுமான ஜெயானந்த் தான். ஆம் அவர்களின் ‘அண்ணா திராவிடர் கழகம்’ இந்த முறை உள்ளாட்சி தேர்தலில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேட்பாளர்களை களமிறக்கி இருக்கிறதாம். இது பற்றி பேசும் ஜெயானந்த் “நாங்க யாரையும் வர்புறுத்தலை, ஆனால் எங்கள் கட்சிக்காரங்களோ ‘வெற்றி உறுதி’ன்னு சொல்லி களமிறங்கியிருக்காங்க. எங்களோட இலக்கு, ஒரு சட்டசபை தொகுதிக்கு ஐந்து பஞ்சாயத்துகளை வெல்றது. 

இப்ப மட்டுமில்லை, எதிர் வரும் பொதுத்தேர்தலில் ஐந்தாயிரம் முதல் பத்தாயிரம் வாக்குகள்தான் அ.தி.மு.க.வின் வெற்றியை தீர்மானிக்கபோகும் வித்தியாசமா இருக்கும். கிட்டத்தட்ட 40 தொகுதிகளில் அந்த நிலை இருக்கும். அப்போது வெற்றியை தீர்மானிக்கும் கட்சியாக நாங்க இருப்போம்.” என்று கெத்தாக சொல்லியிருக்கிறார். 

இந்த அவமானத்தை அ.தி.மு.க.வால் தாங்க முடியலை, ‘ச்சை யாரெல்லாம் நமக்கு சவால் விடுறதுன்னு இல்லாம போச்சே!’ என்கிறார்கள். 

-    விஷ்ணுப்ரியா

click me!