பொன்முடியின் கோட்டையில் மாஸ் என்ட்ரி கொடுக்கும் ஜெகத்ரட்சகன்... அதிமுகவை வீழ்த்த வரும் பாமகவின் சொந்தக்காரர்!

By sathish kFirst Published Sep 22, 2019, 1:24 PM IST
Highlights

விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதை அடுத்து இத்தொகுதிகளில் யார் வேட்பாளர் என்ற கேள்வி திமுக, அதிமுக என இருதரப்பிலும் தேர்தல் களத்தில் இறங்க நாள் குறித்துவிட்டது. 

விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதை அடுத்து இத்தொகுதிகளில் யார் வேட்பாளர் என்ற கேள்வி திமுக, அதிமுக என இருதரப்பிலும் தேர்தல் களத்தில் இறங்க நாள் குறித்துவிட்டது. 

அதிமுகவை பொறுத்தவரை அமைச்சர் சிவி. சண்முகத்தின் அண்ணன் ராதாகிருஷ்ணன் தேர்தலில் நிற்க மறுத்துவிட்ட நிலையில், கானை ஒன்றிய செயலாளர் முத்தமிழ்ச்செல்வன், ஏற்கனவே கடந்த தேர்தலில் போட்டியிட்ட சிந்தாமணி வேலுவை நிற்கவைக்க உள்ளார்களாம்.

திமுக கூட்டணியில் நாங்குநேரி காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டுவிட்ட சூழலில், விக்கிரவாண்டி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட விழுப்புரம் மாவட்டத்திலேயே பலர் முக்கிய புள்ளிகள் போட்டியிட தயங்குகின்றனர். காரணம் இன்னும் ஒன்றரை வருடங்களே ஆட்சிக்காலம் உள்ள நிலையில் ஜெயித்தாலும் பெருசா ஒரு யூஸும் இல்லை என யோசிக்கிறார்களாம். 

விக்கிரவாண்டி தொகுதியில் 103 ஊராட்சிகள், ஒரு பேரூராட்சி அனைத்து ஒன்றிய செயலாளர்களையும் சில வாரங்கள் முன்பு அறிவாலயத்துக்கு அழைத்த  ஸ்டாலின். விக்கிரவாண்டி, கானை கிழக்கு, மேற்கு உட்பட அனைத்து ஒன்றியச் செயலாளர்களிடமும் யாருக்கு வேட்பாளர் வாய்ப்பு கொடுக்கலாம்? என கேட்கப்பட்டதாம். மத்திய மாவட்டப் பொருளாளர் புகழேந்தி, மத்திய மாவட்ட துணைச் செயலாளர் ஜெயச்சந்திரன் ஆகியோரது பெயர்கள்.

இரு ஒன்றிய செயலாளர்கள் புகழேந்திக்குக் கொடுக்கலாம் என்று தெரிவித்துள்ளார்கள். ஒரு ஒன்றிய செயலாளர் கட்சி யாருக்குக் கொடுத்தாலும் வேலை செய்கிறோம் என்று சொல்லியிருக்கிறார்.  

விக்கிரவாண்டியை பொறுத்தவரை வன்னியர் சமுதாய வேட்பாளர்தான் நிறுத்தினால் ஜெயிக்க வாய்ப்புள்ளதால் புகழேந்தி, ஜெயச்சந்திரன் இருவருமே வன்னிய சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள்தான் அதுமட்டுமல்ல சி. வி. சண்முகத்துக்கு ஈடு கொடுக்கமுடியும் என திமுகவினர் பேசி வருகின்றனர்.  இந்த நிலையில்தான் ஸ்டாலினுக்கு இன்னொரு யோசனை எடுத்துச் சொல்லப்பட்டிருக்கிறது.

முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன் விழுப்புரம் மாவட்டத்துக்காரர் என்பதாலும், அவரும் வன்னிய சமூகத்தை சேர்ந்தவர் என்பதாலும், துட்டு விஷயத்திலும் சிவி சண்முகத்தை சமாளிக்க ஜெகத்ரட்சகனின் மகன் சந்தீப் ஆனந்தை விக்கிரவாண்டியில் நிறுத்தினால் நல்லாருக்கும் என ஸ்டாலினுக்கு ஐடியா கொடுத்திருக்கிறார்கள்.  

இதில் இன்னொரு மேட்டர் என்னன்னா?  விக்கிரவாண்டியில் பாமக தனித்து நின்றே 40 ஆயிரம் ஒட்டு வாங்கியிருக்கிறது. இப்போ அதிமுக கூட  பாமக இருக்கிறது. இதனால்  ஜெகத்தின் மகனை நிறுத்தினால், ஜெயிக்க வாய்ப்பிருக்கிறது. பாமகவில் இருக்கும் ஜகத் ரட்சகனின் சம்பந்தி முறையான சோழன் குமார் வாண்டையார் மூலம்  அந்த தொகுதியிலிருக்கும் முக்கிய வன்னியர்சங்க தலைவர்களையும், பாமகவில் பேசி ஆதரவை கேட்டு வாங்க முடியும். இது மற்ற வேட்பாளர்களை நிறுத்தினால் கொஞ்சம் சிரமமாயிடும்.

விழுப்புரம் மாவட்டத்தில் பொன்முடியின் அதிருப்தியாளர்கள் பொன்முடியை காலி செய்ய இதுதான் சமயம் என்று ஜெகத்ரட்சகன் மகனை களத்தில் இறக்கினால் ஜெயிக்கவைப்பார்கள் என சில ஐடிகளும் ஸ்டாலினிடம் சொல்லப்பட்டதாம். ஆகா பொன்முடிய பார்த்து பார்த்து உருவாக்கிய கோட்டைக்கும் ஜகத்தின் என்ட்ரி பயங்கர மாஸாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

click me!