இடைத்தேர்தலில் போட்டியில்லை... மீண்டும் ஜகா வாங்கிய ஆண்டவர்..!

By vinoth kumarFirst Published Sep 22, 2019, 11:03 AM IST
Highlights

இந்த இரு தொகுதி இடைத்தேர்தலிலும் மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது என அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார். 
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், பழைய கொள்ளையர் கட்சிகளையும், அதன் கூட்டு பங்காளிகளையும், பெருவாரி மக்களின் எண்ணப்படி ஆட்சியில் இருந்து அகற்றி, 2021-ல், ஆட்சி பொறுப்பினை, மக்களின் பேராதரவுடன் கைப்பற்றி மக்களாட்சிக்கு வழிவகுக்கும் முனைப்போடு மக்கள் நீதி மையம் கட்சி விரைவாக முன்னேறி வருகிறது. 

நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது என அக்கட்சி தலைவர் கமல்ஹாசன் அதிரடியா அறிவித்துள்ளார்.

கன்னியாகுமரி தொகுதியில் எம்.பி.யாக வெற்றி பெற்ற வசந்தகுமார், தனது நாங்குநேரி எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார். இதனால் அந்த தொகுதி காலியானது. இதேபோல் விழுப்புரம் மாவட்டம் விக்ரவாண்டி தொகுதி எம்.எல்.ஏ. ராதாமணி உடல்நலக்குறைவால் காலமானதால் அந்த தொகுதியும் காலியானது. 

இந்நிலையில், நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 21-ம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது. இதனையடுத்து, விக்கிரவாண்டி தொகுதியில் திமுக, நாங்குநேரி தொகுதியில் காங்கிரசும் போட்டியிட உள்ளது. அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் விருப்ப மனுவும் கொடுக்க அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், அமமுகவும் இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக டிடிவி.தினகரன் அறிவித்துள்ளார். 

இந்நிலையில், இந்த இரு தொகுதி இடைத்தேர்தலிலும் மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது என அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், பழைய கொள்ளையர் கட்சிகளையும், அதன் கூட்டு பங்காளிகளையும், பெருவாரி மக்களின் எண்ணப்படி ஆட்சியில் இருந்து அகற்றி, 2021-ல், ஆட்சி பொறுப்பினை, மக்களின் பேராதரவுடன் கைப்பற்றி மக்களாட்சிக்கு வழிவகுக்கும் முனைப்போடு மக்கள் நீதி மையம் கட்சி விரைவாக முன்னேறி வருகிறது. 

நாங்குநேரியிலும், விக்கிரவாண்டியிலும் தங்கள் தலைவர்களையும், அவர்களின் தலைப்பாகைகளையுமாவது தக்க வைத்து கொள்ளலாம் என்கின்ற எண்ணத்துடன் ஆட்சியில் இருந்தவர்களும், ஆள்பவர்களும் போடும் இடைத்தேர்தல் எனும் இந்த ஊழல் நாடகத்தில் மக்கள் நீதி மையம் பங்கெடுக்காது என கமல்ஹாசன் கூறியுள்ளார்.

click me!