வேலைக்கு வராத ஆசிரியர்களின் பணியிடங்கள் காலிப் பணியிடங்களாக அறிவிப்பு !! தமிழக அரசு அதிரடி !!

By Selvanayagam PFirst Published Jan 29, 2019, 9:20 PM IST
Highlights

இன்றிரவு 7 மணிக்குள் பணியில் சேராத ஆசிரியர்களின் பணியிடங்கள்  காலிப்பணியிடங்கள்  கணக்கிடப்படும்  என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கான உத்தரவை  பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

ஜாக்டோ - ஜியோ அமைப்பைச் சேர்ந்த அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும்  கடந்த 22–ஆம் தேதி முதல் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  இதனால் மாணவ மாணவியரின் கல்வி பாதிப்படைந்து உள்ளது. 

இந்த நிலையில், ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்த கெடு  முடிவடைந்தது. எனினும் போராட்டம் தொடரும் என அவர்கள் அறிவித்தனர்.

இதற்கிடையே பணிக்கு திரும்புமாறு தமிழக அரசு எச்சரிக்கை விடுத்தது. இருப்பினும் போராட்டம் தொடர்ந்தது. இந்நிலையில் 90% ஆசிரியர்கள் பணிக்கு திரும்பியுள்ளதாக தமிழக அரசு  தெரிவித்துள்ளது.

இப்போது பள்ளிக்கல்வித்துறை தரப்பில் வெளியாகியுள்ள அறிக்கையில், இன்றிரவு 7 மணிக்குள் பணியில் சேராத ஆசிரியர்களின் பணியிடங்கள் காலிப்பணியிடங்களாக கணக்கிடப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

நாளை முதல் பணியில் சே ரவரும் ஆசிரியர்கள் முதன்மை கல்வி அலுவலர்களின் முன் அனுமதியை பெற வேண்டும் என்றும்  காலிப்பணியிடங்களை கணக்கிட்டு பட்டியலை அனுப்ப வேண்டும் என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று வரையில் பணியில் சேராத ஆசிரியர்கள் மீது 17-பி-இன் கீழ் குற்றகுறிப்பாணை வழங்க வேண்டும் எனவும்  முதன்மைகல்வி அலுவலர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

click me!