சென்னையில் இன்று சில் சில் மழை பெய்யும்! வானிலை மையம் கூல் அறிவிப்பு!

Asianet News Tamil  
Published : Nov 19, 2017, 01:40 PM ISTUpdated : Sep 19, 2018, 01:28 AM IST
சென்னையில் இன்று சில் சில் மழை பெய்யும்! வானிலை மையம் கூல் அறிவிப்பு!

சுருக்கம்

It rains in Chennai today

தமிழகம் மற்றும் புச்சேரியில் இன்று மிதமான மழை பெய்யும் என்றும், சென்னையின் ஒரு சில இடங்களில் மாலையோ அல்லது இரவு நேரங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் கனமழை மற்றும் மிக கனமழை பெய்து வருகிறது. தாழ்வான பகுதிகளில் தேங்கிய மழைநீரை அகற்றியும், போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுத்து வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும், வட தமிழக மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியிலும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில், வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஒரு சில இடங்களில் மாலையோ அல்லது இரவு நேரங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது. 
 

PREV
click me!

Recommended Stories

ஈரானிடம் நடுங்கும் டிரம்ப்... அமரிக்க கப்பல்களுக்கு தண்ணீருக்கு அடியில் புதை குழி தோண்டிய காமெனி..!
ஈரானுடன் போருக்கு தயாரான அமெரிக்கா..! வண்டவாளம் ஏறப்போகும் வல்லரசின் பெருமை..! பீதியில் ட்ரம்பின் ராணுவம்..!