
முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மூன்றாவது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, ஒரு கோடி ரூபாய் மோசடி செய்ததாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டது.
செந்தில் பாலாஜி, போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது, வேலை வாங்கி தருவதாக கூறி, பாலரிடம் சுமார் ஒரு கோடி ரூபாய் அளவுக்கு பணம் வாங்கியுள்ளார். பணம் கொடுத்தவர்கள் செந்தில் பாலாஜி மீது வழக்கு தொடுத்திருந்தனர்.
இந்த நிலையில், செந்தில் பாலாஜிக்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிரடி சோதனையை நேற்று துவங்கியது. இந்த சோதனையின்போது, ஒரு கோடி ரூபாய் கைப்பற்றியதாக கூறப்படுகிறது. அது மட்டுமல்லாமல், செந்தில் பாலாஜியின் உறவினர்கள் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
கரூரில் உள்ள ராமகிருஷ்ணா நகர், தான்தோன்றி மலை, ராம் நகர் உள்ளிட்ட 10 இடங்களில் 13 குழுக்களாக பிரிந்து அதிகாரிகள் இந்த சோதனை நடத்தி வருகின்றனர். வருமான வரித்துறை அதிகாரிகளின் சோதனை சோதனை இன்றும் மூன்றாவது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.