
காந்தி, நேரு, அம்பேத்கர் போன்ற முக்கிய தலைவர்கள் வெளிநாடுவாழ் இந்தியர்கள் தான் என காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவிற்கு சுற்றுப் பயணம் சென்றுள்ள ராகுல் காந்தி அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வருகிறார். அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் மாணவர்களுடன் கலந்துரையாடினார். மாணவர்களுடன் இந்திய அரசியல் சூழல் குறித்தும் பேசினார்.
தற்போது அமெரிக்க வாழ் தமிழர்கள் மத்தியில் உரையாற்றியுள்ளார். அப்போது பேசிய அவர், வெளிநாடு வாழ் இந்தியர்களாலேயே காங்கிரஸ் இயக்கம் பிறந்தது. காங்கிரஸ் இயக்கம் ஒரு வெளிநாடு வாழ் இயக்கம். மகாத்மா காந்தி ஒரு வெளிநாட்டில் வாழ்ந்த இந்தியர்.
நேரு, இங்கிலாந்து நாட்டிலிருந்து வந்தார். அம்பேத்கர், ஆசாத், பட்டேல் ஆகியோர் வெளிநாடுவாழ் இந்தியர்களாக இருந்தவர்கள். இதுபோல ஆயிரக்கணக்கான வெளிநாடுவாழ் இந்தியர்களின் பங்களிப்புகளுக்கு அங்கீகாரம் அளிக்கப்படவில்லை என ராகுல் காந்தி பேசினார்.