விபரீத விளையாட்டு வேண்டாம்.. டாக்டர்கள் பரிந்துரை இன்றி ஆக்சிஜன் எடுத்துக்கொள்வது தவறு.. அமைச்சர் சுப்ரமணியன்

By vinoth kumarFirst Published May 18, 2021, 6:46 PM IST
Highlights

18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை நாளை மறுநாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார் என அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியுள்ளார்.

18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை நாளை மறுநாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார் என அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு நாளை மறுநாள் முதல் கொரோனா தடுப்பூசி போடப்படும். தடுப்பூசி போடும் திட்டத்தை நாளை மநுாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். தமிழகத்தில் 5 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டால் கொரோனா முழுமையாக ஒழிக்கப்படும். 

தனியார் மருத்துவமனையில் போலி ரெம்டெசிவிர் மருந்து செலுத்துப்பட்டதால் மருத்துவர் உயிரிழந்துள்ளார் என அமைச்சர் மா.சுப்ரமணியன் விளக்கமளித்துள்ளார். போலி ரெம்டெசிவிர் மருந்து விற்ற சுரேஷ் என்பவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மருத்துவர்களின் பரிந்துரை இன்றி ஆக்சிஜன் எடுத்துக்கொள்வது தவறு. அதை முயற்சிக்க வேண்டாம். 

மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கு வீடுகளுக்கே சென்று தடுப்பூசி போட அரசு முடிவு செய்துள்ளது. கிராம பகுதிகளில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் தேவையான வசதிகள் செய்து தர நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். 

click me!