சிறையில் மாஜி அமைச்சர் மணிகண்டன் உல்லாசமாக இருந்தாரா? உண்மை நிலவரம் என்ன? அமைச்சர் சொன்ன பரபரப்பு தகவல்.!

Published : Jun 29, 2021, 07:42 PM ISTUpdated : Jun 29, 2021, 07:44 PM IST
சிறையில் மாஜி அமைச்சர் மணிகண்டன் உல்லாசமாக இருந்தாரா? உண்மை நிலவரம் என்ன? அமைச்சர் சொன்ன பரபரப்பு தகவல்.!

சுருக்கம்

முன்னாள் அமைச்சர் மணிகண்டன் சொகுசு வசதியுடன் சைதாப்பேட்டை சிறையில் தங்கி இருப்பதாகக் கூறுவது தவறானது. அவர், சில நாட்களுக்கு முன்பே புழல் சிறைக்கு மாற்றப்பட்டுவிட்டார்.

கடந்த அதிமுக ஆட்சியில் திமுகவை சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளை எந்த நிகழ்ச்சிகளுக்கும் அழைக்கவில்லை. அப்படி அழைத்தாலும் மரியாதை குறைவாகவே நடத்தினர் என அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார். 

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி;- முன்னாள் அமைச்சர் மணிகண்டன் சொகுசு வசதியுடன் சைதாப்பேட்டை சிறையில் தங்கி இருப்பதாகக் கூறுவது தவறானது. அவர், சில நாட்களுக்கு முன்பே புழல் சிறைக்கு மாற்றப்பட்டுவிட்டார். 

சிறையில் சட்டப்படி யாருக்கு, என்னென்ன சலுகைகள் இருக்கிறதோ, அதைத்தான் வழங்க முடியும். விதிகளுக்குப் புறம்பாக யாருக்கும், எந்த சலுகையும் வழங்கப்பட மாட்டாது. அதிமுக ஆட்சியில் அக்கட்சியினர் எந்த திட்டத்திலும் தலையிடாததைப் போன்றும், தற்போது அனைத்து திட்டங்களிலும் திமுகவின் தலையீடு இருப்பதைப் போன்றும் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் எம்எல்ஏ கூறுவது தவறானது. 

கடந்த அதிமுக ஆட்சியில் திமுகவை சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளை எந்த நிகழ்ச்சிகளுக்கும் அழைக்கவில்லை. அப்படி அழைத்தாலும் மரியாதை குறைவாகவே நடத்தினர். ஆனால், தற்போது திமுக ஆட்சியில் எதிர்க்கட்சி என்று பாராமல் அனைத்து கட்சி எம்எல்ஏக்களும் உரிய மரியாதை அளிக்கப்பட்டு வருகிறது. 

PREV
click me!

Recommended Stories

Magalir Urimai Thogai: அக்டோபரில் ரூ.2,500 வரப்போகுதா? முதல்வர் விஜய் கொடுக்கப்போகும் அடுத்த ஜாக்பாட்!
Thaimaman Thanga Modhiram Scheme: தாய்மாமன் தங்க மோதிரம் - யார் தகுதி? என்னென்ன ஆவணங்கள் தேவை?