கூட்டணி சிதையாமல் பார்த்துக்குங்க... அது உங்க பொறுப்புதான்... திமுகவுக்கு சிபிஎம் வார்னிங்..!

Published : Mar 06, 2021, 09:27 AM IST
கூட்டணி சிதையாமல் பார்த்துக்குங்க... அது உங்க பொறுப்புதான்... திமுகவுக்கு சிபிஎம் வார்னிங்..!

சுருக்கம்

திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு விவகாரத்தில் அதிருப்தி தலை தூக்கியுள்ள நிலையில். கூட்டணிக் கட்சிகளுடனான ஒற்றுமை சிதைவடையாமல் பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு திமுகவுக்கு இருப்பதாக மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.  

திமுக கூட்டணியில் விசிக, சிபிஐ, மமக, இ.யூ.மு.லீக் ஆகிய கட்சிகள் தொகுதி உடன்பாடு கண்டுள்ளன. காங்கிரஸ், சிபிஎம், மதிமுக ஆகிய கட்சிகளுடனான கூட்டணி இன்னும் இறுதியாகவில்லை. அக்கட்சிகள் எதிர்பார்க்கும் தொகுதிகளை திமுக தர முன்வராததால், கூட்டணியில் அதிருப்தி தலைதூக்கியுள்ளது. இந்நிலையில் தமிழக சிபிஎம் செயலாளர் பாலகிருஷ்ணன் திமுகவின் அணுகுமுறை குறித்து பேசியுள்ளார்.


சென்னையில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய கே.பாலகிருஷ்ணன் பேசும்கையில், “நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி வீழ்த்தப்பட வேண்டும். நம்முடைய கூட்டணி சிதைவு ஏற்பட்டு விடாமல் திமுக பார்த்து கொள்ள வேண்டும். ஒற்றுமைதான் முக்கியம். சிபிஎம் ஆட்சிக்கு வர போவது கிடையாது. நாங்கள் இதுவரை ஆட்சிக்கும் வந்ததில்லை. பெரும்பான்மை இடங்களைப் பிடிப்பதும் எங்கள் இலக்கு கிடையாது. ஆளுகிற கட்சிகளுக்கு எதிராக போராடி வரும் கட்சிதான் சிபிஎம். யார் ஆட்சிக்கு வந்தாலும் மாறபோவதில்லை. எதிர் காலத்திலும் போராட்டத்தில் ஈடுபடுவோம்” என பாலகிருஷ்ணன் பேசினார்.
 

PREV
click me!

Recommended Stories

பாஜகவின் வாக்கு திருட்டு அட்டூழியம்..! ஆர்எஸ்எஸின் அத்துமீறல்..! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேச அட்டாக்..!
மொத்தமாகப் பணிந்த எடப்பாடி..! பொதுக்குழுவில் இது மட்டும் நடந்தால் அதிமுகவே ஆட்சி அமைக்கும்..! அடித்துச் சொல்லும் ஆர்.எஸ். மணி..!