மு.க.ஸ்டாலின் அரசியலில் தன்னை தனிமைப்படுத்திக் கொள்வதே மக்களுக்கு நல்லது... கே.டி.ஆர்.அதிரடி..!

Published : Jun 16, 2020, 06:12 PM IST
மு.க.ஸ்டாலின் அரசியலில் தன்னை தனிமைப்படுத்திக் கொள்வதே மக்களுக்கு நல்லது... கே.டி.ஆர்.அதிரடி..!

சுருக்கம்

ஸ்டாலின் தமிழக அரசியலில் இருந்து தன்னை தனிமைப்படுத்திக் கொள்வது மக்களுக்கு பேருதவியாக இருக்கும்

'ஒன்றிணைவோம் வா' திட்டத்தால் தான் பலருக்கு கொரோனா தொற்று அதிகம் ஏற்பட்டது அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திமுகவிற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

 பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தபோது, ‘’மக்கள் மட்டுமில்லாது திமுகவினரே ஸ்டாலின் மீது மிகுந்த கோபத்தில் உள்ளனர். ”ஒன்றிணைவோம் வா” திட்டத்தின் மூலம் விளம்பரம் தேடி கொள்ளும நோக்கில் திமுகாவின் எம்.எல்.ஏ அன்பழகனை பலி கொடுத்து விட்டது என்று அவரது ஆதரவாளர்கள் இன்று வரை குமுறி வருகின்றனர்.

இந்த பேரிடரிலும் அரசியல் செய்து மக்களை குழப்பி வருகிறது திமுக. கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளவர்களிடம் இது மனச்சோர்வையும், குழப்பத்தையும் ஏற்படுத்தும். நிவாரண பொருட்கள் வழங்குவதாக கூறி கொண்டு. ஒட்டு மொத்த மக்களின் மன நிம்மதியையும் அக்கட்சி கெடுத்துள்ளது. ஸ்டாலின் தமிழக அரசியலில் இருந்து தன்னை தனிமைப்படுத்திக் கொள்வது மக்களுக்கு பேருதவியாக இருக்கும்” என்று அவர் தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

ஊழல் திமுக கூட்டணியை வீழ்த்துவது உறுதி.. பாஜகவுக்கு எத்தனை சீட்? இபிஎஸ்-பியூஸ் கோயல் கூட்டாக பேட்டி!
அமர்பிரசாத்துடன் ஆந்திரா பக்கம் கரை ஒதுங்கிய அண்ணாமலை..! அதிமுக பேச்சு வார்த்தையில் கழட்டிவிட்ட பாஜக..!