அடுத்த 24 மணி நேரத்தில் அடித்து ஊற்றப்போகிறது.. இந்த 6 மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை..

By Ezhilarasan BabuFirst Published Jun 23, 2021, 12:45 PM IST
Highlights

வெப்பசலனத்தின் காரணமாக தமிழ்நாட்டில் 23.06.2021: தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய கன மழையும்,  

வெப்பசலனத்தின் காரணமாக தமிழ்நாட்டில் 23.06.2021: தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 

24.06.2021: மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய (நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி திண்டுக்கல், தென்காசி) மாவட்டங்கள், தென் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில், ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும், ஏனைய மாவட்டங்களில் அனேகமாக வறண்ட வானிலையே நிலவும். 

25.06.2021, 26.06.2021: தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும், ஏனைய மாவட்டங்களில் அனேகமாக வறண்ட வானிலையே நிலவும்.

27. 06. 2021:, கடலோர மாவட்டங்கள், உள் மாவட்டங்கள் மற்றும் புதுவை, பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் அனேகமாக வறண்ட வானிலையே நிலவும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 38 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும். அதனை அடுத்த 24 நேரத்தில் (24.06.2021) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 38 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும். 

கடந்த 24 மணி நேரத்தில்  அதிகபட்ச மழை அளவு (சென்டிமீட்டரில்): திருமானுர்  (அரியலூர்) 11, மன்னார்குடி  (திருவாரூர்) 8, நந்தியார்  ஹெட் (திருச்சிராப்பள்ளி) 7, திருவையாறு  (தஞ்சாவூர்), ஏற்காடு  (சேலம்), முதுகுளத்தூர்  (ராமநாதபுரம்) தலா 5, நடுவட்டம் (நீலகிரி)  4, ரிஷிவந்தியம் (கள்ளக்குறிச்சி) 3, திருச்செங்கோடு  (நாமக்கல்), பாடாலூர் (பெரம்பலூர்),  ஆனந்தபுரம்  (விழுப்புரம்)  தலா 2, பவானிசாகர்   (ஈரோடு), சோலையாறு (கோவை), தேக்கடி  (தேனி), ஓமலூர்  (சேலம்) தலா   1,

மீனவர்களுக்கான எச்சரிக்கை :
23.06.2021   முதல் 27.06.2021  வரை:  தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு   அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50  கிலோ மீட்டர் அவ்வப்போது 60 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.மீனவர்கள் மேற்குறிப்பிட்ட தேதிகளில் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள். 

click me!