அணில் மூலம் மின் தடை... ஆதாரத்துடன் ராமதாஸுக்கு பதிலடி கொடுத்த செந்தில் பாலாஜி...!

By Kanimozhi PannerselvamFirst Published Jun 23, 2021, 12:34 PM IST
Highlights

என்னது அணிலால் மின் வெட்டு ஏற்படுகிறதா? என சமூக வலைத்தளங்களில் பலரும் அமைச்சரின் கருத்தை விமர்சிக்க ஆரம்பித்தனர். இ

தமிழகத்தில் முழு ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின்னர், அறிவிக்கப்படாத மின் வெட்டுக்கள் அதிகரித்து வருவதாக புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. கடந்த சில தினங்களுக்கு முன்பு இதற்கு குறித்த கேள்விக்கு பதிலளித்த மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி 10 நாட்களில் மின் பராமரிப்பு பணிகள் அனைத்தும் முழுமையாக முடிக்கப்பட்டு, இனி மின் வெட்டு என்ற நிலையே இருக்காது என உறுதியாளித்தார். 

ஆனாலும் சென்னை  உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் தொடர் மின் வெட்டு தொடர் கதையாகி வருவது மக்களை அவதிக்குள்ளாக்கியுள்ளது. சமீபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த செந்தில் பாலாஜி இதுகுறித்த கேள்விக்கு, கடந்த அதிமுக ஆட்சியில் எந்த பராமரிப்பு பணிகளும் செய்யப்படவில்லை என்று தெரிவித்தார். சில இடங்களில் செடிகள் வளர்ந்து கம்பிகளோடு மோதும் போது அதில் அணில்கள் ஓடும். அந்த அணில்கள் ஓடும் போது இரண்டு லைன்கள் ஒன்றாகி மின்சார தடை ஏற்படும் என தெரிவித்தார். 

என்னது அணிலால் மின் வெட்டு ஏற்படுகிறதா? என சமூக வலைத்தளங்களில் பலரும் அமைச்சரின் கருத்தை விமர்சிக்க ஆரம்பித்தனர். இதனிடையே பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ், மின் கம்பிகளில் கொடி படர்ந்து அணில்கள் ஓடுவதால் மின் தடை ஏற்படுகிறது: மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி - விஞ்ஞானம்.... விஞ்ஞானம்!. சென்னையில் இப்போதெல்லாம் அடிக்கடி மின் தடை ஏற்படுவதன் மர்மம் என்னவாக இருக்கும்? ஒருவேளை சென்னையில் அணில்கள் பூமிக்கு அடியில் ஓடுகின்றனவோ? என தன்னுடைய ட்விட்டரில் பக்கத்தில் கிண்டலாக பதிவிட்டிருந்தார். 

பாம நிறுவனர் ராமதாஸ் கூறியதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில்  டிரான்ஸ்பாமர்களில் அணில் இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டு, கடந்த அதிமுக ஆட்சியில் 9 மாதங்களாக மின் பராமரிப்புப் பணிகள் நடைபெறவில்லை, மரக்கிளைகள் வெட்டப்படவில்லை - அவை மின் கம்பிகளில் உரசுகின்றன, அணில்கள் உள்ளிட்ட உயிரினங்கள் கம்பிகளில் படுவதாலும் கூட  சில இடங்களில் மின் தடை ஏற்பட்டிருக்கின்றன என்று இதனையும் ஒரு காரணமாகச் சொன்னேன். அணில் மட்டுமே காரணம் என நான் சொன்னதாக சித்தரிக்கும் ராமதாஸ் அவர்கள் தம் கூட்டணிக் கட்சியான அதிமுகவிடம் ஏன் பராமரிப்பு பணிகளைச் செய்யவில்லை எனக் கேட்டிருக்கலாம். அணில்களும் மின்தடை ஏற்படுத்துகின்றன என்பது உலகில் மின்வாரியங்கள் சந்திக்கும் சவால்; தேடிப் படித்திருக்கலாம்! என குறிப்பிட்டுள்ளார். 

மேலும் பறவைகள், அணில்கள் கிளைகளுக்கிடையே தாவும் பொழுதும் மின்தடை ஏற்படுகிறது. களப்பணியாளர்கள் உயிரைப் பணயம் வைத்து சரி செய்வதற்கான பணிகளை முன்னெடுக்கிறார்கள்.  எந்த சவாலும் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு பெரிதன்று! திட்டமிடல், களப்பணி மூலம் உண்மையான மின்மிகை மாநிலத்தை உருவாக்குவோம்! என்றும் பதிவிட்டுள்ளார். 

கடந்த அதிமுக ஆட்சியில் 9 மாதங்களாக மின் பராமரிப்புப் பணிகள் நடைபெறவில்லை, மரக்கிளைகள் வெட்டப்படவில்லை - அவை மின் கம்பிகளில் உரசுகின்றன, அணில்கள் உள்ளிட்ட உயிரினங்கள் கம்பிகளில் படுவதாலும் கூட சில இடங்களில் மின் தடை ஏற்பட்டிருக்கின்றன என்று இதனையும் ஒரு காரணமாகச் சொன்னேன். (1/3) pic.twitter.com/ZSMiI5qeQC

— V.Senthilbalaji (@V_Senthilbalaji)
click me!