சவால் விட்ட அண்ணாமலை.! விசாரணைக்கு அழைக்க போலீஸ் திட்டம்..? அதிர்ச்சியில் பாஜக நிர்வாகிகள்

By Ajmal Khan  |  First Published Mar 7, 2023, 9:19 AM IST

வட மாநில தொழிலாளர்கள் பிரச்சனை தொடர்பாக அவதூறு பரப்பும் வகையில் கருத்து தெரிவித்தாக கூறி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது போலீசார் வழக்கு பதிவு செய்திருந்த நிலையில், அண்ணாமலையை விசாரணைக்கு அழைக்கும் வகையில் சம்மன் அளிப்பது தொடர்பாக போலீசார் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர்.


வட மாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல்

தமிழகத்தில் 14 வட மாநில தொழிலாளர்கள் கொல்லப்பட்டதாக தவறான செய்தி கடந்த சில நாட்களாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் காரணமாக அச்சமடைந்த தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்ல தொடங்கினார். இதனையடுத்து பீகாரில் இருந்து அரசு அதிகாரிகள் தமிழகத்தில் ஆய்வு நடத்தினர். அப்போது தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லையென ஆய்வு முடிவில் தெரியவந்தது. மேலும் பொய்யான தகவல்களை பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் இரு மாநில அரசும் உறுதி பூண்டது. இந்த பிரச்சனைக்கு மத்தியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில், வட மாநில தொழிலாளர்கள் அவர்களது சொந்த ஊருக்கு செல்ல காரணம் திமுக தான் என குற்றம்சாட்டியிருந்தார். திமுக வின் ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் உள்ளிட்டவற்றால் தான் வட மாநிலத்தவர்கள் மீதான வெறுப்பு ஏற்பட்டுள்ளதாக  அண்ணாமலை குறிப்பிடிருந்தார்.

Tap to resize

Latest Videos

அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்ததற்கு கண்டனம்... மார்ச்.10 அன்று ஆர்ப்பாட்டம் அறிவித்தது பாஜக!!

 அண்ணாமலை மீது வழக்கு பதிவு

மேலும் நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், திமுக அமைச்சர் பொன்முடி, திருமாவளவன்  உள்ளிட்டோர் வட மாநில தொழிலாளர்களை அவமானப்படுத்தும் நோக்கில் பேசி வருவதாக அண்ணாமலை தனது அறிக்கையில் தெரிவித்திருந்தார். இதனையடுத்து சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் அண்ணாமலை மீது கலகத்தை தூண்டும் வகையில் பேசுவது, பேச்சால் அல்லது எழுத்தால் உணர்ச்சியை தூண்டுதல், அறிக்கை மூலமாக குறிப்பிட்ட நபர் மீது குற்றம் சாட்டி பிரிவினையை தூண்டுதல், உள்நோக்கத்துடன் செயல்படுதல் ஆகிய 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதன் காரணமாக அதிர்ச்சி அடைந்த அண்ணாமலை தமிழக அரசுக்கு சவால் விடுத்திருந்தார்.

சம்மன் அனுப்ப போலீஸ் திட்டம்.?

அதில்,திறனற்ற திமுகவுக்கு திராணி இருந்தால் என்னை கைது செய்யவும்.பொய் வழக்குகளை போட்டு ஜனநாயக குரல்வளையை நசுக்கி விடலாம் என்று எண்ணுகிறீர்கள். ஒரு சாமானிய மனிதனாக சொல்கிறேன், 24 மணி நேரம் கால அவகாசம் உங்களுக்கு அளிக்கிறேன், முடிந்தால் என் மீது கை வையுங்கள்! என அண்ணாமலை தெரிவித்திருந்தார். இந்த நிலையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர்கிரைம் போலீசார் அண்ணாமலை மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்கள். அண்ணாமலை வெளியிட்ட அறிக்கை தொடர்பாக சட்ட நிபுணர்களுடன் கலந்து பேசி முடிவு எடுக்க இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர், மேலும் அண்ணாமலைக்கு விசாரணைக்கு வரும்படி சம்மன் அனுப்பலாமா என்பது தொடர்பாகவும், அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தொடர்பாக நீதிமன்றம் கூறிய உத்தரவையும் போலீசார் ஆராய்ந்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

இதையும் படியுங்கள்

கொத்து கொத்தாக மடியும் மக்கள்..! சூதாட்ட நிறுவனத்திற்கு ஆதரவாக ஆளுநர் ரவி- இறங்கி அடிக்கும் வேல்முருகன்
 

click me!