ஆட்சியை பிடிக்க சும்மா ரவுண்ட் கட்டி ஆப்பு அடிக்கும் அமித்ஷா... கெலாட் ஆதரவாளர்கள் வீட்டில் ஐடி ரெய்டு..!

By vinoth kumarFirst Published Jul 13, 2020, 5:23 PM IST
Highlights

ராஜஸ்தானில் நிலவும் அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் முதல்வரின் ஆதரவாளர்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். 

ராஜஸ்தானில் நிலவும் அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் முதல்வரின் ஆதரவாளர்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். 

ராஜஸ்தான் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியில் முதல்வர் அசோக் கெலாட், துணை முதல்வர் சச்சின் பைலட் இடையே பனிப்போர் உச்சத்தை எட்டியள்ளது. தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் சச்சின் பைலட் டெல்லியில் முகாமிட்டுள்ளார். இதனால், அசோக் கெலாட் அரசு தற்போது ஆட்டம் காண ஆரம்பித்துள்ளது. இந்நிலையில், அவசர அவசரமாக முதல்வர் அசோக் கெலாட் இல்லத்தில் காங்கிரஸ் சட்டமன்றக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில், 90க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் பங்கேற்றதாக கூறப்படுகிறது. இவர்கள் அனைவரும் பலத்த பாதுகாப்புடன் ஓட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில், அரசியல் நெருக்கடி ஒருபுறம் இருக்க ராஜஸ்தானில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். முதல்வர் கெலாட்டுககு நெருக்கமானவரும், காங்கிரஸ் கட்சியின் மாநில துணைத்தலைவருமான ராஜீவ் அரோரா அலுவலகத்தில் சோதனை நடந்து வருகிறது. இவருக்கு சொந்தமான  அலுவலகத்திலும் வருமானவரித்துறை சோதனை நடத்துகின்றனர். அதேபோல் இவரின் நண்பர்கள் வீடுகளிலும் சோதனை நடைபெறுகிறது. 

அங்கு ஆட்சி கவிழும் நிலை இருக்கும் போது இப்படி வருமான வரித்துறை சோதனை நடப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சோதனை பற்றி காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா கூறுகையில், இன்றைக்குள் அமலாக்கத்துறையும் வருவது நிச்சயம். மேலும், ஒவ்வொரு முறையும் ஏதேனும் அரசியல் நெருக்கடி ஏற்படும்போது, தவறான நோக்கங்களுடன் களத்தில் இறங்க தயாராக இருக்கிறார்கள் என விமர்சனம் செய்துள்ளார்.

click me!