அதிமுக ஆட்சியின் திட்டங்களுக்கு திமுக பெயர் சூட்டுவதா.? திமுக அரசை போட்டுத்தாக்கி எடப்பாடி பழனிச்சாமி!

Published : Apr 18, 2022, 09:06 PM IST
அதிமுக ஆட்சியின் திட்டங்களுக்கு திமுக பெயர் சூட்டுவதா.? திமுக அரசை போட்டுத்தாக்கி எடப்பாடி பழனிச்சாமி!

சுருக்கம்

“அதிமுகவில் வாரிசு அரசியல் என்பதே கிடையாது. அதிமுகவில் உழைக்கிற அனைவருக்குமே உயர் பதவி கிடைக்கும். அதிமுக ஆட்சியில் மக்களுக்கான அனைத்து திட்டங்களையும் கொடுத்தோம்."

அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களுக்கு திமுக பெயர் சூட்டி வருகிறது என்று அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

அதிமுகவில் வாரிசு அரசியல் கிடையாது

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே வளையப்பட்டியில் முன்னாள் அமைச்சர் பாப்பாசுந்தரம் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி மற்றும் உருவச்சிலை திறப்பு விழா நடைபெற்றது.  இந்த நிகழ்ச்சிக்கு முன்னாள் அமைச்சரும் கரூர் மாவட்டச் செயலாளருமான எம்.ஆர். விஜயபாஸ்கர் தலைமை வகித்தார். விழாவில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், “அதிமுகவில் வாரிசு அரசியல் என்பதே கிடையாது. அதிமுகவில் உழைக்கிற அனைவருக்குமே உயர் பதவி கிடைக்கும். அதிமுக ஆட்சியில் மக்களுக்கான அனைத்து திட்டங்களையும் கொடுத்தோம். 

திமுகவின் பொங்கல் பரிசு

அதிமுக ஆட்சியில் பல திட்டங்கள் தொடங்கப்பட்டன. அந்தத் திட்டங்களுக்கு எல்லாம் திமுக அடிக்கல் நாட்டி பெருமை பேசி வருகிறது. அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களுக்கு திமுக பெயர் சூட்டி வருகிறது. கடந்த 11 மாத கால திமுக ஆட்சியில் மக்களுக்காக எதுவுமே செய்யவில்லை. அதிமுக ஆட்சியில் எல்லோருக்கும் பொங்கல் பரிசு வழங்கப்பட்டது. ஆனால், அதிமுக ஆட்சியில் கொடுக்கப்பட்ட பொங்கல் பரிசும், திமுக அரசு கொடுத்த பொங்கல் பரிசும் எப்படி இருந்தன என்பது மக்களுக்கு நன்றாகவே தெரியும். அதிமுக ஆட்சியில் நீர் மேலாண்மையில் முதலிடத்தில் இருந்தோம். குடிமராமத்து திட்டத்தின் மூலம் நீர்நிலைகள் எல்லாம் நிரம்பியதால் தண்ணீர் பற்றாக்குறையே இல்லாத மாநிலமாக தமிழகம் திகழ்ந்தது. 

மூடு விழா

காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டம், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரியில் 7.5 சதவீத இடஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அதிமுக அரசுதான் கொண்டு வந்தது. அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களை எல்லாம் திமுக ஆட்சி நிறுத்தி வருகிறது. அதிமுகவின் திட்டங்களான தாலிக்கு தங்கம், மகளிருக்கு இரு சக்கர வாகனம் ஆகிய திட்டங்களுக்கு திமுக அரசு மூடுவிழா நடத்திவிட்டது” என்று எடப்பாடி பழனிச்சாமி பேசினார். 
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Tamil Nadu CM Vijay Assembly Speech: தமிழ்நாட்டிற்காக எந்த அவமானத்தையும் தாங்கிக்கொள்வேன்.! சட்டசபையில் அடித்து பேசிய முதல்வர் விஜய்.!
kalaignar karunanidhi: கலைஞரின் வார்த்தை விளையாட்டு.! சொற்களை வீசி சிரிக்க வைத்த வசீகரன்.! பாமர மக்களையும் ரசிக்க வைத்த அல்டிமேட் அரசியல் பேச்சு.!