பேருந்து கட்டணம் உயர்கிறதா? அமைச்சர் ராஜகண்ணப்பன் பரபரப்பு தகவல்..!

By vinoth kumarFirst Published Jul 13, 2021, 4:26 PM IST
Highlights

நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக பேருந்து கட்டணம் உயர்த்தப்பட மாட்டாது.

இலவசப் பயணம் அறிவிக்கப்பட்ட பிறகு 60 சதவீதம் மகளிர் அரசுப் பேருந்தில் பயணம் செய்ததாக  அமைச்சர் ராஜகண்ணப்பன் தகவல் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக பேருந்துகள் பல மாதங்களாக இயக்கப்படாமல் இருந்தது. கடந்த ஓராண்டாக சரிவர பேருந்துகள் இயக்கப்படவில்லை. தற்போது கொரோனா குறைந்து வருவதால் தமிழகத்திற்குள் மாவட்ட வாரியாக பேருந்துகள் இயக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 50 சதவித இருக்கைகளுடன், முககவசம், தனிமனித இடைவெளியை பின்பற்றி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இதனிடையே, நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து வருகிறது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன. இந்நிலையில், பேருந்து கட்டணம் உயர்த்தப்படுமா என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. 

இந்நிலையில், போக்குவரத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;-  நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக பேருந்து கட்டணம் உயர்த்தப்பட மாட்டாது. 

தமிழகத்தில் 19,201 பேருந்துகளில் 15,627 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இலவசப் பயணம் அறிவிக்கப்பட்ட பிறகு 60 சதவீதம் மகளிர் அரசுப் பேருந்தில் பயணம் செய்ததாக தெரிவித்துள்ளார்.

click me!