காலியாகிறதா அமமுக தலைமை அலுவலகம்..? பரிதாபத்தில் டி.டி.வி..!

By Thiraviaraj RMFirst Published Jul 2, 2019, 12:30 PM IST
Highlights

அமமுகவிலிருந்து விலகி அதிமுகவில் இசக்கி சுப்பையா இணைய உள்ளதால் அமமுக கட்சி தலைமையகம் என்னவாகுக் என்கிற கேள்வி எழுந்துள்ளது.

அமமுகவிலிருந்து விலகி அதிமுகவில் இசக்கி சுப்பையா இணைய உள்ளதால் அமமுக கட்சி தலைமையகம் என்னவாகுக் என்கிற கேள்வி எழுந்துள்ளது.

சென்னை அசோக் நகரில் அமமுக அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்தக் கட்டடம் இசக்கி சுப்பையாவுக்கு செந்தமானது. இதனால் அவர் கட்சியைவிட்டு விலகிய நிலையில் அங்கு அலுவலகம் செயல்படுமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது. கடந்த வாரம்தான் டி.டி.வி. தினகரன் இசக்கி சுப்பையாவின் அந்த கட்டடத்தை அமமுக அலுவலகமாக பயன்படுத்திக்கொள்ள மேலும் ஓராண்டு நீட்டித்து ஒப்பந்தம் செய்திருந்தார். 

இதுகுறித்து இசக்கி சுப்பையா கூறுகையில், அந்தக் கட்டடம் எனது மகன் நடத்தும் நிறுவனத்துடையது. எனது மகன் இசக்கி துரைக்கும் அமமுகவுக்கும் இடையில் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. அதில் தவறான முடிவை எடுக்க மாட்டோம். ஒப்பந்தப்படி அந்தக் கட்டடம் செயல்படும் என அவர் தெரிவித்துள்ளார். ஆகையால் ஒப்பந்தம் முடியும் வரை அந்த அலுவகம் வழக்கம்போல செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இவ்வளவு நெருடலுக்குப் பிறகும் அங்கு அமமுக அலுவலகத்தை டி.டி.வி.தினகரன் நடத்துவாரா? அல்லது ஏதேனும் வேறு முடிவுகளை எடுப்பாரா? என்பது தெரியவில்லை.  

click me!