உலக மகா யோக்கியரா சிதம்பரம்..? காங்கிரஸை கதறவிடும் சீமான்..!

By Vishnu PriyaFirst Published Oct 18, 2019, 6:33 PM IST
Highlights

தமிழக அரசியல் இப்போது சீமானை சுற்றிக் கும்மியடித்துக் கொண்டிருக்கிறது. ராஜீவ் காந்தியின் படுகொலையை பற்றி அவர் ஒரு வீராவேச டயலாக்கை உதிர்த்துவிட, கடுப்பேறிப்போன காங்கிரஸோ புகார், கண்டன அறிக்கை என்று விட்டு விளாசிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் காங்கிரஸை பதிலுக்கு கிழி கிழி என கிழித்து தொங்கவிட்டுள்ளார், ஒரு அரசியல் புலனாய்வு இதழ் தொடர் கட்டுரையொன்றில்..

தமிழக அரசியல் இப்போது சீமானை சுற்றிக் கும்மியடித்துக் கொண்டிருக்கிறது. ராஜீவ் காந்தியின் படுகொலையை பற்றி அவர் ஒரு வீராவேச டயலாக்கை உதிர்த்துவிட, கடுப்பேறிப்போன காங்கிரஸோ புகார், கண்டன அறிக்கை என்று விட்டு விளாசிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் காங்கிரஸை பதிலுக்கு கிழி கிழி என கிழித்து தொங்கவிட்டுள்ளார், ஒரு அரசியல் புலனாய்வு இதழ் தொடர் கட்டுரையொன்றில். .

அதன் ஹைலைட் பாயிண்ட்கள் இதோ....
*    காங்கிரஸ்காரர்களுக்கு காது என்கிற உறுப்பு இருக்கிறது என்பது இப்போதுதான் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. அதனால்தான் ‘சீமான் ராஜீவ் காந்தி குறித்து அவதூறாகப் பேசிவிட்டார். அவர் மீது நடவடிக்கை எடுங்கள்.’ என தலைகீழாக குதிக்க துவங்கியுள்ளனர். 
*    ஒன்று தெரியுமோ, நான் காங்கிரஸையும், காங்கிரஸ் தலைவர்களையும் கழுவி ஊற்றாத நாள் இல்லை. ராஜீவ் காந்தி மரணம் குறித்து ஏதோ நான் புதிதாகப் பேசுவதாக நினைக்கிறார்கள் இந்த புத்திசாலிகள். 
*    ஈழமே அழிந்தபோது திறக்காத இந்த காதுகளை இப்போது திறந்துள்ளார்கள். அதற்கான கருவியாக நான் என்பதில் எனக்கு மட்டற்ற மன நிறைவுதான். 

*    காறித் துப்பக்கூடிய அளவுக்கா ஒரு கட்சியின் செயல்பாடு இருப்பது? காங்கிரஸின் செயல்பாடு அப்படித்தான் இருக்கிறது. 
*    உலகமகா யோக்கியர் ஐயா சிதம்பரத்தை வெளியே கொண்டு வர போராடுகின்றனர் காங்கிரஸார். திகாரில் அடைபட்டுக் கிடக்கும் சிதம்பரத்துக்கு வேண்டுமானால் கொசுக்கடியும், குளிரும் புதிதாக இருக்கும். ஆனால் எமக்கு இதெல்லாம் பழகிய விஷயங்கள்தான். நானும், சிதம்பரமும் சிவகங்கை மாவட்டத்துக்காரர்கள்தான். ஆனால் அவர் உள்ளே போயிருப்பது பணத்துக்காக, என்னை உள்ளே தள்ள முயல்வது இனத்துக்காக. 
*    திகார் சிறையில் ஐயா சிதம்பரம் அணு அணுவாக அல்லல் படுவதாக வருகின்ற செய்திகளைப் பார்க்கிற போதெல்லாம் முள்வேலி முகாமினுள் அடைக்கப்பட்ட எம் தமிழர் முகங்கள்தான் நினைவில் வருகின்றன. இனத்துக்கு துரோகம் செய்தவர்கள் நான்கு சுவற்றுக்குள் கிடக்கிறார்கள். 


*    ராஜீவ் காந்தி மரணத்தில் விடுதலைப்புலிகளுகு தொடர்பு இல்லை. நாங்கள் ராஜீவை கொல்லவில்லை என எத்தனையோ முறை சொன்னோம். ‘சர்வதேச சதிதான் ராஜீவ் கொலைக்கு காரணம்! என நாங்கள் மட்டுமல்ல, எத்தனையோ புலனாய்வு அமைப்புகளும் சொன்னார்கள். இந்தக் கருத்துக்களை எல்லாம் காங்கிரஸார் கேட்டார்களா, ஏற்றார்களா, நம்பினார்களா? இல்லையே. சம்பந்தமே இல்லாமல் ஏழு பேரை விடுதலை செய்தார்களா!? இல்லையே. ஏதோ பக்கத்தில் இருந்து பார்த்தது போல் ‘ராஜீவ் கொலைக்கு பிரபாகரன் தான் காரணம்’ என்று திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். 
*    ராஜீவ் கொலைக்கும் விடுதலைப் புலிகளுக்கும் சம்பந்தமில்லை! என பல முறை நாங்கள் சொல்லியும் நீங்கள் கேட்காததால், உங்கள் கருத்துக்கு உடன்பட்டு ‘ஆமாம், இந்திய அமைதிப்படையை அனுப்பி எங்கள் இன மக்களைக் கொன்றழித்த கொடுமைக்கான பரிசுதான் ராஜீவ் மரணம்’ என்கிறோம். உடனே என்னை கைது செய்யச் சொல்லி கதறுகிறார்கள். இத்தனை வருடங்களாக அவர்கள் சொன்னதைத்தானே இப்போது நானும் சொன்னேன்! என்று கேட்டால் அதற்கு விளக்கம் சொல்ல நாதி இல்லை. 

*    ’வரலாற்ரில் பெரிய தவறைச் செய்துவிட்டார் ராஜீவ்காந்தி. பதினைந்தாயிரம் மக்களை அங்கே கொன்றதும், இங்கே ராஜீவ் காந்தியை கொன்றதும்தான் மிச்சம். வெளியுறவுக் கொள்கையில் ஏற்பட்ட மிகப்பெரிய தவறால்தான் அந்தத் துயரம் நடந்தது.’ என்று சொல்வது நானல்ல, நட்வர்சிங். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரே இப்படிச் சொன்னபோது சும்மா இருந்தார்கள். ஆனால் இன்று எனக்கு எதிராக சிலிர்த்துக் கிளம்புகிறார்கள். 
*    சிலரோ ‘சீமான் இப்படி பேசியிருக்க கூடாது. அப்படிப் பேசியிருக்க கூடாது.’ என்கிறார்கள். ஆகச் சிறந்தவர்களை அடியொற்றி வளர்ந்த எனக்கு பேசுவதற்குக் கற்றுத்தர இன்னொருவன் இனி பிறந்து வந்தால்தான் உண்டு. 
நான் மற்றவர்கள் போல் துண்டுச் சீட்டு எழுதி வைத்து, அதையும் தப்பும் தவறுமாகப் பேசுகிற அரைகுறை தலைவன் அல்ல. 
- என்று வெளுத்தெடுத்திருக்கிறார். 
ஹும்! இதெல்லாம் எங்குட்டு போயி முடியுமோ!?

click me!