"கருப்பு பணம் அதிகமானதால் பயப்படுகிறாரா இளையராஜா"..? இசைஞானியை டார் டாரா கிழித்த கம்யூனிஸ்ட் எம்.பி.

Published : Apr 16, 2022, 01:19 PM ISTUpdated : Apr 16, 2022, 01:49 PM IST
"கருப்பு பணம் அதிகமானதால் பயப்படுகிறாரா இளையராஜா"..? இசைஞானியை டார் டாரா கிழித்த கம்யூனிஸ்ட் எம்.பி.

சுருக்கம்

அதில் அம்பேத்கரின் கனவுகளை, சிந்தனைகளை நிஜமாக்கி வருபவர் மோடி என்றும், அம்பேத்கர் இருந்திருந்தால் மோடியை பாராட்டி இருப்பார் என்றும் குறிப்பிட்டுள்ளார். 

பிரதமர் மோடியை அம்பேத்கருடன் ஒப்பிட்டுப் பேசியுள்ள இளையராஜாவுக்கு நாளுக்கு நாள் கண்டனங்கள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இளையராஜாவை வறுத்தெடுத்து வருகின்றனர். உப்புக்களும் வைரமும் ஒன்றா என  இளையராஜாவுக்கு கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி திருப்பூர் எம்பி சுப்புராயன் கேள்வி எழுப்பி உள்ளார்.

இசைஞானி என தமிழக மக்களால் கொண்டாடப்பட்டு வருபவர் இசையமைப்பாளர் இளையராஜா. இவரது இசையை மக்கள் கொண்டாடினாலும் அவரின் செயல்பாடுகள் மற்றும்  அணுகுமுறைகள் பல நேரங்களில் சர்ச்சைக்குரியவைகளாகவே இருந்து வருகிறது. இளையராஜா பிறரிடம் பழக தெரியாதவர், எவரிடமும் முகத்தில் அறைந்தார் போல வெடுக்கென பேசிவிடும் நிதானம் மற்றவர் என அவர் மீது தொடர்ந்து விமர்சனம் இருந்து வருகிறது. இந்நிலையில்தான் அவர் சட்ட மேதை டாக்டர் அம்பேத்கர் மற்றும் பிரதமர் மோடி ஆகியோரை ஒப்பிட்டு அம்பேத்கர் அண்ட் மோடி என்ற தலைப்பில்  ப்ளூ கிராப்ட் பதிப்பகம் வெளியிட்டுள்ள நூலுக்கு முன்னுரை ஒன்றை எழுதி உள்ளார்.

அதில் அம்பேத்கரின் கனவுகளை, சிந்தனைகளை நிஜமாக்கி வருபவர் மோடி என்றும், அம்பேத்கர் இருந்திருந்தால் மோடியை பாராட்டி இருப்பார் என்றும் குறிப்பிட்டுள்ளார். அவரின் இந்த கருத்தை பலரும் பல வகைகளில் விமர்சித்து வருகின்றனர். இளையராஜாவின் இந்த கருத்தை விமர்சித்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், இளையராஜா பாவம் அவரை ஆர்எஸ்எஸ் காரர்கள் சுற்றிவளைத்து இருக்கக்கூடும் என காட்டமாக விமர்சித்துள்ளார். இன்னும் பலர் இளையராஜாவின் இசையை வேண்டுமானால் ரசிக்கலாம். மற்றபடி அவருக்கு வேறு எதிலும் ஞானம் இல்வை என கடுமையாக விமர்சித்துள்ளார். அதேநேரத்தில் இசைஞானி  என்றால் எதை வேண்டுமானாலும் பேசலாமா என்றும் இளையராஜாவை கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில் இளையராஜாவின் இந்த கருத்தை திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினரும் கம்யூனிஸ்ட் கட்சி தலைவருமான சுப்பராயன், பொது தளமான அனைவரும் பயன்படுத்தும் முகநூல் பக்கத்தில் இளையராஜாவுக்கு எதிராக கருத்து பதிவிட்டுள்ளார். அதிலு உப்புக்களும் வைரமும் ஒன்றா.? உதவாக்கரையும் மாமனிதரும் ஒன்றா, கருப்பு பணம் சேர்ந்து விட்டதால் ஏற்பட்ட அச்சம் காரணமாக இளையராஜாவுக்கு ஏற்பட்ட பிதற்றல் என அவர் பதிவிட்டுள்ளார். இதை பலரும் ஆதரித்து வருகின்றனர்

அதேபோல் தன்னைவிட ஜூனியரான ஏ.ஆர் ரகுமான் பல விருதுகளைப் பெற்று விட்டார். இந்நிலையில் தனக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்ற விரக்தியில் இருக்கும் இளையராஜா இப்படி பாஜகவை புகழ்ந்து பேசிய அதன் மூலம் விருதுகளை வாங்க வேண்டுமென முனைப்பு காட்டுகிறார் என்றும் பலரும் அவரை விமர்சித்து வருகின்றனர். 

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஜனவரியில் அதிர்ச்சி..! தவெக மற்றொரு அதிமுகவாக மாறும்..! இனிமேல் அதிமுக கிடையாது..! செங்கோட்டையன் சூளுரை..!
இத்தாலியில் முதலீடு செய்ய அமைச்சர் கே.என். நேரு தரப்பு திட்டம்..? அமலாக்கத்துறை பகீர் தகவல்..!