முதல்வர் வேட்பாளர் எடப்பாடியா..? நோ... நோ... அதிமுகவுக்கு பயங்கர ஷாக் கொடுக்கும் பாஜக..!

By Thiraviaraj RMFirst Published Oct 7, 2020, 1:09 PM IST
Highlights

தேர்தல் நேரத்தில்தான் அதிமுக - பாஜக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் குறித்து முடிவு எடுக்கப்படும் என பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 
 

தேர்தல் நேரத்தில்தான் அதிமுக - பாஜக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் குறித்து முடிவு எடுக்கப்படும் என பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.  வரும் 2021 ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுகவில் சார்பில் யாரை முதலைமைச்சர் வேட்பாளராக அறிவிப்பது குறித்து சர்ச்சையை முதலமைச்சர் ஆதரவு அமைச்சர்கள் கிளப்பினர்.

 

இதனை தொடர்ந்து இன்று,  2021 சட்டமன்ற தேர்தலின் அதிமுக முதல்வர் வேட்பாளராக இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி போட்டியிடுவார் என துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் அறிவித்தார். கட்சியின் முடிவுக்கு நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஒத்துழைப்பு அளித்து பணியாற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக முன்னாள் மத்தி அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், ‘’அதிமுகவில் பிரச்னை எழும், இதில் குளிர்காய காத்திருந்த கட்சிகளுக்கு முடிவு கட்டக்கூடிய வகையில் அறிவிப்பு வெளியானதில் மகிழ்ச்சி. தமிழகத்தில் பாஜக ஆட்சியை கொண்டுவர நல்லமுயற்சி நடக்கிறது. தேர்தல் நேரத்தில்தான் அதிமுக - பாஜக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் குறித்து முடிவு எடுக்கப்படும். அதிமுக -பாஜக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் பழனிசாமி என தற்போது சொல்லத்தேவையில்லை. சட்டப்பேரவை தேர்தல் நேரத்தில் தான் அதிமுக -பாஜக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் குறித்து முடிவு எடுக்கப்படும்’’என அவர் தெரிவித்துள்ளார். இது அதிமுக தொண்டர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.  
 

click me!