அமித்ஷாவுக்கு பயப்படுகிறாரா ஸ்டாலின்?: சுயமரியாதை தி.மு.க.வை சுட்டெரிக்கும் விமர்சனங்கள்.

By Vishnu PriyaFirst Published Sep 20, 2019, 4:40 PM IST
Highlights

மோடியையே மிரட்சி அடைய வைத்த தைரியலட்சுமியான ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின் அவர் அமைத்த அ.தி.மு.க. அரசானது மத்தியை ஆண்ட, மீண்டும் ஆளும் பாரதிய ஜனதாவை சார்ந்து இருக்கிறது! என்பது  பொது விமர்சனம். இதே கருத்தை தி.மு.க.வோ தனது பாணியில் ‘பா.ஜ.வின் அடிமை அ.தி.மு.க.! பினாமி அரசு! டெல்லிக்கு பயந்த சவலைப் பிள்ளைகள்! சுயமரியாதையற்ற கழகம்!’ என்று தாறுமாறாக திட்டி வந்தது. அதிலும் அக்கட்சியின் தலைவர் ஸ்டாலினோ சில படிகள் மேலேறி ‘சாடிஸ்ட் மோடி, அவரின் அடிமை தமிழக அரசு’ என்று வெளுத்தெடுத்தார். 

மோடியையே மிரட்சி அடைய வைத்த தைரியலட்சுமியான ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின் அவர் அமைத்த அ.தி.மு.க. அரசானது மத்தியை ஆண்ட, மீண்டும் ஆளும் பாரதிய ஜனதாவை சார்ந்து இருக்கிறது! என்பது  பொது விமர்சனம். இதே கருத்தை தி.மு.க.வோ தனது பாணியில் ‘பா.ஜ.வின் அடிமை அ.தி.மு.க.! பினாமி அரசு! டெல்லிக்கு பயந்த சவலைப் பிள்ளைகள்! சுயமரியாதையற்ற கழகம்!’ என்று தாறுமாறாக திட்டி வந்தது. அதிலும் அக்கட்சியின் தலைவர் ஸ்டாலினோ சில படிகள் மேலேறி ‘சாடிஸ்ட் மோடி, அவரின் அடிமை தமிழக அரசு’ என்று வெளுத்தெடுத்தார். 

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் வீதி வீதியாக பா.ஜ.வையும், அ.தி.மு.க.வையும் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. விளாசியதன் விளைவாக அந்த கூட்டணி இந்த மண்ணில் படுதோல்வியை சந்தித்தது. ஆனால் பிற மாநிலங்கள் கைகொடுத்த நிலையில் முரட்டு மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைத்திருக்கும் பாரதிய ஜனதா, இப்போதெல்லாம் தேசிய ரீதியில் சில முடிவுகளை மிக கெத்தாக முன்னெடுக்கிறது. அதில் ஒன்றுதான் ‘ஒரே நாடு! ஒரே மொழி!’ எனும் கான்செப்ட். 

அதாவது தேசம் முழுவதற்குமான பொது மொழியாக இந்தியை கொண்டு வர பாரதிய ஜனதா ஆளும் மத்திய அரசு முயல்வதாக கடந்த சில நாட்களாக தென்னிந்திய மாநிலங்களில் பெரும் பரபரப்பு பரவி நிற்கிறது. எப்போதுமே மாநில சுயாட்சி தத்துவத்தையும், தமிழ் ஆள வேண்டும் எனும் கோட்பாட்டையும் உயர்த்திப் பிடித்தே பழக்கப்பட்ட கட்சி தி.மு.க. எனவே மத்தியரசை மிக கடுமையாக எதிர்த்தார் ஸ்டாலின். 

அதிலும் கடந்த 14-ம் தேதியன்று கொண்டாடப்பட்ட தேசிய இந்தி நாளில், உள்துறை அமைச்சர் அமித்ஷா “சர்வதேச அளவில் நாட்டை அடையாளப்படுத்த இந்தியாவின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும்.” என்றார். இதற்கு எதிராக வெடித்துக் கிளம்பியது தி.மு.க. மாநிலம் தழுவிய போராட்டம், மறியல், கடையடைப்பு என்றெல்லாம் திட்டங்கள் யோசிக்கப்பட்டன. அதன் முதல் நடவடிக்கையாக இன்று (செப்டம்பர் 20) தி.மு.க. சார்பில் மத்திய அரசை கண்டித்து மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தப்பட போவதாக அறிவித்தது. இந்த நிலையில் கடந்த 18-ம் தேதியன்று ஆளுநர் மாளிகை சென்று வந்த ஸ்டாலின், போராட்டத்தை வாபஸ் பெற்றார். இது தேசிய அளவில் வைரலானது. 

மோடி - அமித்ஷாவுக்கு எதிரான தி.மு.க.வின் தடாலடிகளை மம்தா, மாயாவதி, சந்திரபாபுநாயுடு, பினராயி விஜயன், அகிலேஷ் யாதவ், சீதாராம் யெச்சூரி போன்ற பல மாநிலங்களின், இயக்கங்களின் தலைவர்கள் ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்த நிலையில் இந்த திடீர் வாபஸானது அவர்களுக்குப் புதிர் கிளப்பியது. போராட்ட முடிவிலிருந்து ஸ்டாலின் ஏன் பின் வாங்கினார்? எனும் கேள்வியை அவர்கள் திரும்பத் திரும்ப தங்களுக்குள் கேட்டுக் கொண்டனர். எதிர்க்கட்சிகளிடையில் தேசிய விவாதமாகிப் போன இந்த விவகாரம் பற்றி அரசியல் பார்வையாளர்களிடம் பேசுகையில் “ஆக்சுவலாக அமித்ஷா ஒன்றும் இந்தியை வலிந்து திணிக்கும் நோக்கில் அப்படி பேசவில்லை. அவரிடம் இப்போது அப்படியொரு திட்டமும் இல்லை. தன் பேச்சு தென்னிந்திய மாநிலங்களில் பிரச்னையானதுமே கடந்த 18-ம் தேதியன்று ஒரு  பேட்டியில் ‘தாய்மொழியை தாண்டி வேறு மொழியைப் படிப்பதாக இருந்தால் அது இந்தியாக இருக்க வேண்டும். நானே இந்தி அல்லாத குஜராத்தில் இருந்து வந்தவன். இதுதான் என் பேச்சு, யதார்த்தம். இதற்கும் மேல் சிலர்  இதை வைத்து அரசியல் செய்ய விரும்பினால் அது அவர்களின் இஷ்டம்.’ என்று சொல்லிவிட்டார். 

இந்த பேட்டியானது தேசம் முழுக்க சென்றது, தி.மு.க.வின் கவனத்துக்கும் வந்தது. இதன் பிறகும் கூட போராட்ட விஷயத்தில் தி.மு.க. சாந்தமாகவில்லை. இதனால்தான் டெல்லிக்கு கடும் கோபம் வந்தது. உண்மையில் நம் பக்கம் தவறு இருந்தால் ஸ்டாலின்  போராடுவதில் தப்பில்லை! ஆனால் வெத்து அரசியலுக்காக நம்மை அசிங்கப்படுத்திட நினைக்கிறார் மக்கள் மன்றத்தில், இதை அனுமதிக்க கூடாது! என்று நினைத்தார்கள். அதன் பிறகு  எம்.பி.யாகி டெல்லி சென்றிருக்கும் ஸ்டாலினுக்கு நெருக்கமான தி.மு.க.வின் முக்கியஸ்தர் ஒருவரை பா.ஜ.வின் தூதுவர் ஒருவர் சந்தித்து ’அமித்ஜி இவ்வளவு இறங்கி வந்த பின்னும் ஏன் இப்படி பண்ணுகிறீர்கள்?’ என்று கேட்டிருக்கார். அதர்கு ‘போராட்டம் அறிவிச்சாச்சு. இனி ஒன்றும் பண்ண முடியாது.’ என்று பதில் வந்திருக்கிறது. உடனே ’அப்படியா, உண்மையான பிரச்னைக்கு போராடுவதில் தப்பில்லை. ஆனால் உங்களின் அரசியல் அபத்தமானது. தவறான அரசியல்வாதிகள் நீங்கள். உங்கள் கட்சியின் பொருளாளர் துரைமுருகனின் மகனால்  வேலூரில் தேர்தலே ரத்தானது, மீண்டும் போட்டியிட்டு ஜெயித்து வந்த அவருக்கு நாடாளுமன்ற குழுவில் பதவி கேட்டு வாங்கியுள்ளீர்கள். இப்படி பல சலுகைகளை அனுபவிக்க துவங்கிவிட்டீர்கள். இதற்கெல்லாம்  நாங்கள் வேண்டும். ஆனால் செய்யாத தப்புக்கு எதிர்ப்பீர்களா?இனி  எங்களிடம் எந்த சலுகைகளையும், முன்னுரிமைகளையும் எதிர்பார்க்காதீர்கள். 

2ஜி வழக்கு மேல் முறையீட்டு விசாரணைக்கு வருகிறது,  அதெல்லாம் நினைவில் இருக்குதுதானே! உங்கள் கட்சியின் பெரும் பதவியில் இருப்போர், நிர்வாகிகள் எல்லாரு கை சுத்தமானவர்களா? அவர்கள் மீது பக்கம் பக்கமாக குற்றச்சாட்டுகள் வந்து குவிந்துகிடக்கிறது. பல நூறு, ஆயிரம் கோடிகள் சம்பந்தப்பட்ட விவகாரங்கள். எல்லா கோப்புகளையும் நாங்கள் தூசி தட்டவா? அதையெல்லம கிளற ஆரம்பித்தால் உங்கள் இயக்கத்தில் எல்லா பதவிகளுக்கும் புது நபர்களை தேட வேண்டியிருக்கும். ஏனென்றால் இப்போது இருப்பவர்களும், ஒரு காலத்தில் பெரும் பதவிகளில் இருந்து விட்டு இப்போது ஓய்வில் இருப்பவர்களும் புழல், திகாரில்தான் வருடக்கணக்காய் வாழ வேண்டும்.’ என்று அதிரிபுதிரியாக ஆதாரத்தோடு பேசியிருக்கிறார். 

நடுங்கிப் போன அந்த எம்.பி. தி.மு.க.வின் தலைமைக்கு போன் போட்டு, விஷயத்தை விளக்கியிருக்கிறார். இந்த நிலையில் கவர்னரை சந்தித்த பின் போராட்டம் வாபஸ் ஆகியிருக்கிறது. அப்படியானால் பா.ஜ.வை பார்த்து பயந்துவிட்டதுதானே தி.மு.க.? சுயமரியாதை அரசியலை கூவிக் கூவி அழுத்தம் கொடுக்கும் தி.மு.க.வுக்கு இப்படியொரு நிலையா?” என்று முடித்தார்கள். 

இது பற்றி தி.மு.க. தரப்பில் கேட்டால்....”பயமா? எங்களுக்கா? எங்கள் அகராதியிலேயே அந்த வார்த்தை கிடையாது. இந்தி திணிப்பில் பாரதிய ஜனதா ஒன்றும் வீரியமாகவோ, உக்கிரமாகவோ இல்லை! என்பது புரிந்த நிலையில்தான் தலைவர் அவர்கள் அந்த வாபஸ் முடிவை எடுத்திருக்கிறார். வழக்கு, மிரட்டல் இதற்கெல்லாம் அஞ்சும் இயக்கமில்லை.” என்கிறார்கள். 
கவனிக்கிறோம்!

click me!