தமிழகத்தில் நடப்பது மக்களாட்சியா? ஆளுனர் ஆட்சியா? கொந்தளிக்கும் ராமதாஸ்..!

Published : Oct 16, 2020, 10:05 AM IST
தமிழகத்தில் நடப்பது மக்களாட்சியா? ஆளுனர் ஆட்சியா? கொந்தளிக்கும் ராமதாஸ்..!

சுருக்கம்

சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டங்களை ஆளுனரால் தடுக்க முடியும் என்றால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட  அரசுக்கு என்ன தான் மரியாதை? 

நீட் தேர்வை க்ளியர் செய்யும் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ மற்றும் பல் மருத்துவ படிப்புகளில் சேருவதில் 7.5 சதவீத “கிடைமட்ட இடஒதுக்கீடு” வழங்கும் மசோதாவை, தமிழக சட்டமன்றம் கடந்த சில வாரங்களுக்கு முன் நிறைவேற்றியது. ஆனால் அதற்கு ஆளுநர் ஒப்புதல் அழிக்கவில்லை. 

இதுகுறித்து பாமல நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பதிவில், ‘’மருத்துவக் கல்லூரிகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5%  இட ஒதுக்கீடு வழங்க தமிழக சட்டப்பேரவையில் சட்டம் இயற்றி 32 நாட்களாகியும் இன்னும் தமிழக ஆளுனர் ஒப்புதல் அளிக்கவில்லை. இது தானாக ஏற்பட்ட தாமதம் அல்ல. திட்டமிட்டு ஏற்படுத்தப்படும் தாமதம்.

சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டங்களை ஆளுனரால் தடுக்க முடியும் என்றால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட  அரசுக்கு என்ன தான் மரியாதை?  தமிழ்நாட்டில்  நடப்பது மக்களாட்சியா? ஆளுனர் ஆட்சியா? என்ற வினாவுக்கு உடனடியாக  விடை காணப்பட வேண்டும்’’ எனத் தெரிவித்துள்ளார். 

PREV
click me!

Recommended Stories

தோல்வி பயத்தால் தொகுதி மாறும் செந்தில் பாலாஜி..? கோவை தான் அடுத்த டார்கெட்.. பக்கா ஸ்கெட்ச் போட்ட திமுக
ஆபரேஷன் சிந்தூரின் முதல் நாளிலேயே பாகிஸ்தானிடம் அடி வாங்கியது இந்தியா..! காங்கிரஸ் தலைவர் சர்ச்சை பேச்சு..!