கமலாலயமா.? காம ஆலயமா.?? காங்கிரஸ் பெண் பிரமுகரின் பகீர் அறிக்கை...

By Ezhilarasan BabuFirst Published Aug 27, 2021, 12:38 PM IST
Highlights

அதிகார பலத்தோடு நடைபெறும் பாஜகவின் பாலியல் குற்றங்கள் பொள்ளாச்சி போன்ற கொடுமையான சம்பவங்களாக மாறாமல் இருக்க, பெண்களை காப்பாற்ற வேண்டும் என்கிற கோரிக்கையோடு, தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் சார்பாக, தமிழக பாஜக அலுவலகமான கமலாலயத்தில் (எ) காம லாலயம் முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும். 

பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள  பாஜகவை சேர்ந்த கே.டி ராகவனை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தியும், அந்த குற்றத்தை தடுக்க தவறிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பதிவி விலக வேண்டும் என வலியுறுத்தியும் தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் சார்பாக போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டம் தமிழ்நாடு மகிலா காங்கிரஸ் மாநிலத் தலைவி வழக்கறிஞர் சுதா. ராமகிருஷ்ணன் தலைமையில் வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் எனவுப் பின்னர் அங்கிருந்து பாஜக தலைமை அலுவலகம் கமலாலயம் நோக்கி முற்றுகை போராட்டம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து சுதா ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையின் முழு விவரம் பின்வருமாறு: தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் சார்பாக எனது தலைமையில் 27-8-2021 வெள்ளிக்கிழமை (இன்று) பிற்பகல் 3 மணியளவில் வள்ளுவர் கோட்டத்தில் இருந்து புறப்பட்டு தமிழக பாஜக அலுவலகத்தில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் பாலியல் வன்முறைக்கு எதிராக பாலியல் குற்றவாளிகளை காப்பாற்றி வரும் மத்திய மோடி அரசை கண்டித்து, தமிழக பாஜக அலுவலகமான கமலாலயத்தில் முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற உள்ளது. 

 பாலியல் விஷச்செடி பாஜகவின் முன்னாள் மாநில பொதுச் செயலாளர் கே.டி ராகவன் என்பவரின் கொடுமையான பாலியல் வன்மம் தற்போது ஆபாச வீடியோவாக வெளிவந்திருப்பது தமிழக மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய தலைவர்கள் பலரும் தொடர்ந்து பாலியல் வன்மம் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி வருகின்றனர்.

இச்சூழலில் இதுபோன்ற 17 பாஜக தலைவர்களின் ஆபாச வீடியோக்கள் இருப்பதாக தகவல்கள் பரவி வருவது பெண் இனத்திற்கே பெயரில் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. அதிகார பலத்தோடு நடைபெறும் பாஜகவின் பாலியல் குற்றங்கள் பொள்ளாச்சி போன்ற கொடுமையான சம்பவங்களாக மாறாமல் இருக்க, பெண்களை காப்பாற்ற வேண்டும் என்கிற கோரிக்கையோடு, தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் சார்பாக, தமிழக பாஜக அலுவலகமான கமலாலயத்தில் (எ) காம லாலயம் முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும். 

எனவே பாலியல் கொடூரன் பாஜகவின் முன்னாள் மாநில பொதுச்செயலாளர் கே.டி ராகவனை கைது செய்ய வேண்டும். தனது கட்சி பெண் நிர்வாகிகளின் மானத்தை பாதுகாக்க தவறிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் உடனடியாக தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும், அதுவரை தமிழ்நாடு மகளிர் காங்கிரஸின் போராட்டங்கள் ஓயாது  இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
 

click me!