
உடல்நலக்குறைவு காரணமாக செப் 22ஆம் தேதி சென்னை அப்போல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதாவுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
ஆனாலும் கடந்த 5ஆம் தேதி ஜெயலலிதா காலமானார். ஜெ.மறைவையொட்டி அப்போல்லோ மருத்துவமனையில் அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அப்போது ஜெ.வுக்கு சிகிச்சையளித்த மருத்துவர்களும் நர்சுகளும் தங்கள் கண்ணீர் மல்க தங்களது நினைவலைகளை பகிர்ந்து கொண்டதாக கூறப்படுகிறது.
சில நர்ஸ்களை ஜெ செல்லப்பெயரிட்டு அழைத்ததாகவும் நர்சுகள் அனைவரிடமும் மிகுந்த அன்புடன் நடந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.
சாப்பிடுவது மிகுந்த சிரமமாக இருந்தாலும் நர்ஸுகள் முன்பு கஷ்டபட்ட ஜெ முயன்றுள்ளார் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
மற்றொரு சுவாரசியமான நிகழ்வையும் செவிலியர்கள் நினைவு கூறுகின்றனர்.
அதாவது அப்போல்லோ மருத்துவமனையில் தயாரித்து அளிக்கப்படும் காபி ஜெவுக்கு முற்றிலும் பிடிக்காதாம். அதை பார்த்ததும் முகம் சுளித்து நர்சுகளை பார்த்து சிரிப்பாராம். அதே நேரத்தில் தமக்கு சிகிச்சையளித்த மருத்துவர்களையும் நர்சுகளையும் பார்த்து "எங்க வீட்டுக்கு வாங்க.. சுவையான கொடநாடு டீ தரேன்" என்று அன்புடன் அழைத்துள்ளார்.
இந்த நிகழ்வை அப்போல்லோ நர்சுகள் கண்ணீருடன் தெரிவித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.