சூர்யாவை மிரட்டுவது அப்பட்டமான கோழைத்தனம்.. பாஜகவை லெப்ட் ரைட் வெளுத்து வாங்கிய பாலகிருஷ்ணன்..!

Published : Jul 05, 2021, 01:56 PM IST
சூர்யாவை மிரட்டுவது அப்பட்டமான கோழைத்தனம்.. பாஜகவை லெப்ட் ரைட் வெளுத்து வாங்கிய பாலகிருஷ்ணன்..!

சுருக்கம்

திரைக் கலைஞர் சூர்யா, தமிழகத்திற்கு நீட் விலக்கு குறித்தும், சினிமா சட்டத்தில் திருத்தம் குறித்தும் தனது விமர்சனங்களை நியாயமாக முன்வைக்கிறார். ஆனால், அவரை மிரட்டும் நோக்கத்துடன் பாஜகவினர் தீர்மானம் போட்டுள்ளனர். இந்தச் செயல் அப்பட்டமான கோழைத்தனத்தின் வெளிப்பாடே ஆகும்.

கருத்துரிமைக்கும் எதிராகச் செயல்படும் பாஜக தலைமையின் போக்கை மாற்றிட வக்கற்றவர்கள், தனி நபர்களுக்கு எதிராகப் பாய்ந்து கொண்டிருக்கிறார்கள் என பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். 

ஒளிப்பதிவு திருத்த மசோதா 2021-ஐ நடிகர் சூர்யா எதிர்த்திருந்த நிலையில் அவரைக் கண்டித்தும், அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் பாஜக இளைஞர் அணி தீர்மானம் நிறைவேற்றியது. பாஜகவின் தனி நபர் எதிர்ப்பு நிலைப்பாட்டை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் கண்டித்துள்ளார்.

இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- திரைக் கலைஞர் சூர்யா, தமிழகத்திற்கு நீட் விலக்கு குறித்தும், சினிமா சட்டத்தில் திருத்தம் குறித்தும் தனது விமர்சனங்களை நியாயமாக முன்வைக்கிறார். ஆனால், அவரை மிரட்டும் நோக்கத்துடன் பாஜகவினர் தீர்மானம் போட்டுள்ளனர். இந்தச் செயல் அப்பட்டமான கோழைத்தனத்தின் வெளிப்பாடே ஆகும்.

தமிழ்நாட்டு மக்களுக்கும், இந்திய மக்களுடைய கருத்துரிமைக்கும் எதிராகச் செயல்படும் பாஜக தலைமையின் போக்கை மாற்றிட வக்கற்றவர்கள், தனி நபர்களுக்கு எதிராகப் பாய்ந்து கொண்டிருக்கிறார்கள். இது வன்மையான கண்டனத்திற்குரிய செயல் என தெரிவித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

Durga Puja: துர்கா பூஜை பந்தல்களில் அசைவ உணவா? VHP என்ன சொல்கிறது!
Free Training: விவசாயிகள், இளைஞர்களுக்கு ஜாக்பாட்.! தமிழ்நாடு அரசு தரும் இலவச பயிற்சி.! இனி லாபம் கொட்டப்போவது உறுதி.!