தமிழக கேரள எல்லையில் தீவிர கொரோனா பரிசோதனை.. மிரட்டும் கொரோனா.. அலறும் தமிழகம்.

By Ezhilarasan BabuFirst Published Feb 26, 2021, 10:56 AM IST
Highlights

இதனால் தற்போது டெல்லி அரசு தங்கள் மாநிலத்துக்குள் இந்த வைரஸ் பரவாமல் தடுப்பதற்கான நடவடிக்கையில் தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில் தமிழக அரசும் புதிய வழிகாட்டு  நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது,  

கேரள மாநிலத்தில் கோவிட்-19 தீவிரம் அடைந்து வருவதை  தொடர்ந்து தமிழக கேரள எல்லையான களியக்காவிளையில் பாதுகாப்பு கருதி தமிழகத்திற்குள் நுழையும் வாகனங்கள், பொதுமக்கள்  தீவிர கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். நோய் தடுப்பு நடவடிக்கையாக தமிழக அரசு இந்த சோதனையை மேற்கொண்டு வருகிறது. 

கடந்த ஆண்டு இறுதியில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் ஒட்டுமொத்த உலகையும் கபளீகரம் செய்துள்ளது. 180க்கும் அதிகமான நாடுகள் இந்த வைரசால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பல்வேறு நோய் தடுப்பு நடவடிக்கைகள் மூலம் உலக அளவில் இந்த வைரஸ் படிப்படியாக குறைந்து வருகிறது. மற்ற நாடுகளை காட்டிலும் இந்தியா இரண்டு கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை கண்டுபிடித்து, அதை மக்களுக்கு விநியோகிக்கும் பணியில் தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் கொரோனா மெதுவாக கட்டுக்குள் வந்த நிலையில், ஒரு சில மாநிலங்களில் மட்டும் அது மீண்டும் தீவிரமாக பரவ தொடங்கியுள்ளது.  குறிப்பாக மகாராஷ்டிரா, கேரளா, சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் இந்த வைரஸ் மீண்டும் தலை தூக்க தொடங்கியுள்ளது. 

இதனால் தற்போது டெல்லி அரசு தங்கள் மாநிலத்துக்குள் இந்த வைரஸ் பரவாமல் தடுப்பதற்கான நடவடிக்கையில் தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில் தமிழக அரசும் புதிய வழிகாட்டு  நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது, அதாவது வெளிநாடுகளில் இருந்து வரும் அனைவரும் கொரோனா பரிசோதனை கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும், வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் 3 நாட்களுக்கு ஒரு முறை பரிசோதனை செய்து முடிவுகளை ஆன்லைனில் பதிவிட வேண்டும், சோதனை முடிவை www newdelhiairport.in என்ற இணையதளத்தில் அப்லோட் செய்து இருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

அதேபோல வெளிமாநிலங்களிலிருந்து வருபவர்களுக்கும் அறிகுறி இருப்பின் கொரோனா பரிசோதனை கட்டாயம் எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக கேரளம், மகாராஷ்டிராவில் இருந்து தமிழகம் வருவோர் கட்டாயம் 7 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும், ஒரே தெருவில் மூன்று வீடுகளில் தொற்று பாதிப்பு ஏற்பட்டால் அந்தப் பகுதி கட்டுப்பாட்டுப் பகுதியாக மாற்றப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் 14 நாட்கள் கட்டுப்பாடு பகுதியாக அறிவிக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் கேரள மாநிலத்தில் கோவிட்-19 தீவிரம் அடைந்து வருவதை  தொடர்ந்து தமிழக கேரள எல்லையான களியக்காவிளையில் பாதுகாப்பு கருதி தமிழகத்திற்குள் நுழையும் வாகனங்கள் பொதுமக்கள்  தீவிர கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். குமரி மாவட்ட ஆட்சி தலைவர் அரவிந்த் உத்தரவின்  பேரில் தமிழக கேரள எல்லைப் பகுதியான களியக்காவிளையில் கோரானா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து  கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு களியக்காவிளை வழியாக நுழையும் வாகனங்கள் தடத்து நிறுத்தப்பட்டு பயணிகளுக்கு கொரோனா சோதனை நடத்தப்பட்டு வருகிறது. சோதனைக்கு மறுப்பவர்கள் காவல்துறையினரால் திருப்பி அனுப்பி வைக்கப்படுகின்றனர். 

 

click me!