முக்கிய 8 துறைகளின் உற்பத்தி வீழ்ச்சி! வரிந்து கட்டும் எதிர்க்கட்சிகள், கலக்கத்தில் பா.ஜ.க.

By Selvanayagam PFirst Published Oct 1, 2019, 8:37 AM IST
Highlights

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் முக்கிய 8 துறைகளின் உற்பத்தி 0.50 சதவீதம் குறைந்துள்ளது. 2015 மார்ச் மாதத்துக்கு பிறகு தற்போதுதான் முக்கிய 8 துறைகளின் உற்பத்தி குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, சிமெண்ட், நிலக்கரி, மின்சாரம், உருக்கு, பெட்ரோலிய சுத்திகரிப்பு பொருட்கள் மற்றும் உரம் ஆகியவை முக்கிய 8 துறைகளாகும். தொழில்துறை உற்பத்தி குறியீட்டை மதிப்பிடுவதில் இந்த எட்டு துறைகளின் பங்களிப்பு சுமார் 40 சதவீதமாக உள்ளது. அதனால் 8 துறைகளின் வளர்ச்சியை வைத்தே தொழில்துறை வளர்ச்சி எப்படி இருக்கும் என்பதை நம்மால் ஒரளவு யூகிக்க முடியும்.

முக்கிய 8 துறைகளின் உற்பத்தி கடந்த 4 ஆண்டுகளில் முதல் முறையாக கடந்த ஆகஸ்ட் மாதத்தில் சரிவு கண்டுள்ளது. அந்த மாதத்தில் முக்கிய 8 துறைகளின் உற்பத்தி 0.50 சதவீதம் குறைந்துள்ளது. 
 
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் முக்கிய 8 துறைகளின் உற்பத்தி குறைந்து இருப்பது அடிப்படை கட்டமைப்பு செலவினங்களில் தேக்கநிலை ஏற்பட்டு இருப்பதை வெளிப்படுத்துகிறது. மேலும் முதலீடுகளை முடுக்கி விட மத்திய அரசு மேற்கொண்ட முயற்சிகள் கட்டுப்படுத்தபட்டுள்ளதே இதற்கு அர்த்தம் என பொருளாதார நிபுணர் ஒருவர் தெரிவித்தார்.

இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் (ஏப்ரல்-ஜூன்) நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 5 சதவீதமாக குறைந்தது. இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் முக்கிய 8 துறைகளின் உற்பத்தி  சரிவு கண்டு இருப்பதால் பொருளாதார வளர்ச்சி குறித்து கவலை எழுந்துள்ளது. 

அதேசமயம் முக்கிய 8 துறைகளின் உற்பத்தி குறைந்துள்ளதால் மத்திய அரசை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

click me!