அநியாயம்.. சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மேலும் 25 ரூபாய் அதிகரிப்பு. 875 ரூபாய் 50 காசுகளுக்கு விற்பனை.

By Ezhilarasan BabuFirst Published Aug 17, 2021, 9:06 AM IST
Highlights

அதிலிருந்து மூன்று மாதங்களாக எந்த மாற்றமும் இல்லாமல் இருந்த சமையல் எரிவாயு சிலிண்டரின்(14.2கிலோ) விலை கடந்த மாதம் 25 ரூபாய் அதிகரித்து, 850.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இது இன்று மேலும் 25 ரூபாய் அதிகரித்து, 875 ரூபாய் 50 காசுகளுக்கு விற்பனையாகிறது. மேலும், வணிக ரீதியான சிலிண்டர்(19 கிலோ) விலையில் 84 ரூபாய் 50 காசுகள்அ திகரித்து, 1,687 ரூபாய்க்கு கடந்த மாதம் விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று 5 ரூபாய் குறைந்து, 1,682 ரூபாய்க்கு விற்கனையாகிறது. 
 

கடந்த மாதத்தை போலவே இந்த மாதமும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 25 ரூபாய் அதிகரித்து, 875 ரூபாய் 50 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இது குடும்ப தலைவிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா விலையின் ஏற்ற இறக்கத்தின் அடிப்படையில் இந்தியாவில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் ஆகியவற்றின் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் தினசரி மாற்றி வருகின்ற நிலையில், சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை மாதத்திற்கு இரு முறை மாற்றி அமைக்கப்படுகின்றன. 

கடந்தாண்டு டிசம்பர் மாதம் 610 ரூபாயாக இருந்த சமையல் எரிவாயு சிலிண்டர் விலை கடந்த பிப்ரவரி மாதத் தொடக்கத்தில் 710 ரூபாய்க்கு விற்பனையானது. இவ்வாறு படிப்படியாக உயர்ந்த சிலிண்டர் விலை மார்ச் மாத தொடக்கத்தில் 835 ரூபாய்கு விற்பனை செய்யப்பட்டது. இதை எதிர்த்து போராட்டம் நடத்தப்பட்டதையடுத்து, சிலிண்டர் விலை 835லிருந்து 10 ரூபாய் குறைக்கப்பட்டு, 825 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. அதிலிருந்து மூன்று மாதங்களாக எந்த மாற்றமும் இல்லாமல் இருந்த சமையல் எரிவாயு சிலிண்டரின்(14.2கிலோ) விலை கடந்த மாதம் 25 ரூபாய் அதிகரித்து, 850.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இது இன்று மேலும் 25 ரூபாய் அதிகரித்து, 875 ரூபாய் 50 காசுகளுக்கு விற்பனையாகிறது. மேலும், வணிக ரீதியான சிலிண்டர்(19 கிலோ) விலையில் 84 ரூபாய் 50 காசுகள்அ திகரித்து, 1,687 ரூபாய்க்கு கடந்த மாதம் விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று 5 ரூபாய் குறைந்து, 1,682 ரூபாய்க்கு விற்கனையாகிறது. 

இந்த புதிய விலை உயர்வு இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. ஏற்கனவே பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மக்கள் அவதிப்படுகிற நிலையில், தற்போது சிலிண்டர் விலையும் அதிகரித்துள்ளதால் இல்லதரசிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். திமுக ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொரு சமையல் சிலிண்டருக்கும் 100 ரூபாய் மானியம் தருவோம் என்று அறிவித்திருந்தது. ஏற்கெனவே பெட்ரோல், டீசல் விலை குறைப்போம் என்று அறிவித்துவிட்டு, தற்போது பெட்ரோல் விலையை மட்டும் 3 ரூபாய்  குறைத்துள்ள திமுக அரசு, தற்போது சிலிண்டர் விலைக்கான மானியத்தை எப்போது அளிக்கும் என எதிர்பார்த்து தமிழக மக்கள் காத்திருக்கின்றனர்.
 

click me!