அதெப்படி பெரியாரை சுதந்திர போராட்ட வீரர்ன்னு சொல்லலாம்..? கொந்தளிக்கும் அர்ஜூன் சம்பத்.!

By Asianet TamilFirst Published Aug 17, 2021, 8:57 AM IST
Highlights

‘சுதந்திரம் வேண்டாம்’ என்ற பெரியார் பெயரை சுதந்திர போராட்ட வீரர் என முதல்வர் குறிப்பிட்டது கண்டிக்கத்தக்கது என்று இந்து மக்கள் கட்சி நிறுவனர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்.
 

சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழக சுதந்திரப் போராட்ட வீரர்களை பட்டியலிட்டார். இந்தப் பட்டியலில் பெரியார் இருந்ததற்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்து சமூக ஊடகங்களில் கருத்திட்டு வருகிறார்கள். இதேபோல வீரன் அழகுமுத்துக்கோன் பெயர் விடுபட்டதாகவும் சர்ச்சையாகி இருக்கிறது. இந்நிலையில் இதுதொடர்பாக இந்து மக்கள் கட்சி நிறுவனர் அர்ஜுன் சம்பத் திருப்பூர் ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்தார்.
அதில், “சுதந்திர தின விழா கொண்டாட்டத்தில் சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு உரிய மரியாதை வழங்கப்படவில்லை. இதனால் சுதந்திர போராட்ட தியாகிகளும் அவர்களுடைய குடும்பத்தினரும் வேதனையில் உள்ளனர். தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தன் பேச்சில் சுதந்திர போராட்ட வீரர்களை வரிசைப்படுத்தியபோது வீரன் அழகுமுத்துக்கோன் பெயரைக் குறிப்பிடவில்லை. அதே வேளையில் ‘சுதந்திரம் வேண்டாம்’ என்ற பெரியார் பெயரை சுதந்திர போராட்ட வீரர் எனக் குறிப்பிட்டார். இது மிகவும் கண்டிக்கத்தக்கது.
முதல்வர் வாசித்த அப்பட்டியலில் இருந்து பெரியார் பெயரை நீக்க வேண்டும். உண்மையான சுதந்திர போராட்ட வீரர்களின் வரலாறு பாடப் புத்தகங்களில் இடம் பெற வேண்டும்” என்று அதில் அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார். 

click me!