இந்தியாவின் பெருமைக்குரிய விலைமதிக்க முடியாத சொத்து..! நெகிழ்ந்த இயக்குனர் பாரதிராஜா..! முதல்வருக்கு நன்றி..

By T BalamurukanFirst Published Sep 25, 2020, 11:16 PM IST
Highlights

    தமிழ் சினிமா உலகிற்கு புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களால் அடையாளம் காட்டப்பட்ட எஸ்பி பாலசுப்பிரமணியம் தென்னிந்தியாவின் நான்கு பெருமைக்குரிய முதல்வர்கள் ஆன கலைஞர், எம்ஜிஆர், என்டி ராமாராவ், ஜெயலலிதா ஆகிய நால்வரோடும் இணைந்து பணியாற்றுகின்ற வாய்ப்பினைப் பெற்றவர்

இந்தியாவின் பெருமைக்குரிய விலைமதிக்க முடியாத சொத்து..! நெகிழ்ந்த இயக்குனர் பாரதிராஜா..! முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ளார். அரசு மரியாதையுடன் எஸ்.பி.பி. உடல் அடக்கம் செய்யப்படும் என அறிவித்த முதலமைச்சருக்கு இயக்குநர் பாரதிராஜா நன்றி தெரிவித்துள்ளார்.

சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஆகஸ்ட் 5-ம்தேதி முதல் சிகிச்சை பெற்றுவந்த எஸ்.பி.பி இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். எஸ்.பி.பி உடல் தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டில் நாளை நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம் உடல் காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் முதலமைச்சருக்கு இயக்குநர் பாரதிராஜா நன்றி தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில்.., "தமிழ் திரை ரசிகர்களை தன்னுடைய இனிய குரலால் இத்தனை ஆண்டுகாலம் தாலாட்டி கொண்டிருந்த எஸ் பி பாலசுப்பிரம ணியம் இன்று மீளா தூக்கத்தில் ஆழ்ந்து விட்டார். ஒரு இசைக் கலைஞராக கணக்கிலடங்காத சாதனைகளைச் செய்துள்ள எஸ்.பி பாலசுப்ரமணியம், இருமல் பாடிய மொத்தப் பாடல்களின் எண்ணிக்கை 45,000 அவர் பெற்ற தேசிய விருதுகள் ஆறு, இந்திய அரசின் உயரிய விருதுகளான பத்மஸ்ரீ, பத்மபூஷன் போன்ற விருதுகளை பெற்ற இசை மேதை அவர்.

இவை எல்லாவற்றிற்கும் மேலாக அவரிடம் இருந்த மாபெரும் சொத்து அவருடைய மனிதநேயம். எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தை எந்த இந்தியனும் ஒரு பாடகராக மட்டும் பார்த்ததில்லை. இந்தியாவின் பெருமைக்குரிய விலைமதிப்பில்லாத சொத்தாகத் தான் பார்த்தார்கள். தமிழ் சினிமா உலகிற்கு புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களால் அடையாளம் காட்டப்பட்ட எஸ்பி பாலசுப்பிரமணியம் தென்னிந்தியாவின் நான்கு பெருமைக்குரிய முதல்வர்கள் ஆன கலைஞர், எம்ஜிஆர், என்டி ராமாராவ், ஜெயலலிதா ஆகிய நால்வரோடும் இணைந்து பணியாற்றுகின்ற வாய்ப்பினைப் பெற்றவர்.

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களும் விடுத்துள்ள இரங்கல் செய்தி எஸ் பி பாலசுப்ரமணியம் எப்படிப்பட்ட உறவினை எல்லா தலைவர்களோடும் வைத்துக் கொண்டிருந்தார் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு. விலைமதிப்பில்லாத அந்த இசைக் கலைஞனை அரசு மரியாதையோடு அடக்கம் செய்வது ஒன்று மட்டுமே அவருக்கு தருகின்ற சரியான அங்கீகாரமாக இருக்கும் என்பதை உணர்ந்து அதை செயல்படுத்த முன்வந்துள்ள முதல்வர் அவர்களுக்கு கலை உலகின் சார்பில் இசை ரசிகர்களின் சார்பில் கோடான கோடி நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

நமது பாரதப் பிரதமரும், தமிழக தமிழக முதல்வரும் கலைத் துறையினர் மீது எந்த அளவு அன்பும் பாசமும் கொண்டிருக்கிறார்கள் என்பதை மொத்த கலை உலகமும் நன்கு அறியும். அதற்கு இன்னும் ஒரு எடுத்துக்காட்டு தான் தமிழக முதல்வரின் இந்த அறிவிப்பு. இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

click me!