இந்தியாவில் சமூகப்பரவலாக மாறியதா கொரோனா..?? மின்னல் வேகத்தில் உயரும் நோய்த் தொற்று..!!

By Ezhilarasan BabuFirst Published May 6, 2020, 1:43 PM IST
Highlights

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 2908 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது ,  இதுவரையில்  இந்தியாவில் வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 49 ஆயிரத்து 436 ஆக உயர்ந்துள்ளது .   

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 2908 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது ,  இதுவரையில்  இந்தியாவில் வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 49 ஆயிரத்து 436 ஆக உயர்ந்துள்ளது .   இந்த தகவல் ஒட்டுமொத்த நாட்டு மக்களையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது ,  அதுமட்டுமின்றி இந்தியாவில் இதுவரையில் 1,695 பேர் உயிரிழந்துள்ளனர் .  ஆனாலும் இந்தியாவில் கொரோனா வைரஸ் சமூக பரவலை அடையவில்லை என மத்தியஅரசு தொடர்ந்து கூறிவருவது மக்கள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது ,  இந்தியாவில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு வேகம் எடுத்துள்ளது ,  நாளுக்கு நாள் வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை புதிய உச்சத்தை எட்டி வருவதால் மக்கள் மத்தியில் மிகுந்த அச்சம் ஏற்பட்டுள்ளது . ஆகவே கொரோனா பாதிப்பின் மூன்றாவது நிலையான சமூக பரவல் என்ற நிலையை  கொரோனா எட்டிவிட்டதோ என்று எண்ணும் அளவுக்கு நாள்தோறும் வைரசால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது

இந்த நிலையில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு சமூக பரவல் நிலையை இன்னும் எட்டவில்லை இயல்பான நிலையிலேயே உள்ளது சமூக பரவலை தடுக்க இந்தியா தொடர்ந்து முயற்சித்து வருகிறது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் ஆறுதல் கூறியுள்ளார் , இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர் பொருளாதாரம் போலவே ஆரோக்கியமும் ரேடாரில் கண்காணிப்பில் இருக்கவேண்டும் அரசாங்கமும் மேம்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்  என தெரிவித்துள்ளார் .  இந்நிலையில் சுகாதார அமைச்சகம் வெளியிட்ட தகவலின் அடிப்படையில்  கடந்த 24 மணி நேரத்தில் 2908 பேருக்கு புதிய கொரோனா தொற்று பதிவாகி உள்ளது.   இதனால் இந்தியாவில் வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 50 ஆயிரத்தை எட்டியுள்ளது அதேபோல் பலியானவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது ஆனாலும் நோயால்  பாதிக்கப்படும் நபர்களும் பெருமளவில்  குணமடைந்து வருகின்றனர் என்பது ஆறுதலை ஏற்படுத்துவதாக உள்ளது . 

இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ளார் மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் கொரோனாவை எதிர்த்துப் போராடுவது ராக்கெட் அறிவியல் போன்று அல்ல இந்த காலகட்டத்தில் கை கால்களை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் சுகாதாரத்தை பேணி பாதுகாக்க வேண்டும் இதுவே நம்மை இயல்பு நிலைக்கு கொண்டுவரும் என தெரிவித்துள்ளார் .  மத்திய மாநில அரசுகள் கொரோனா வைரஸ் குறித்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் போதிலும் நாட்டில் கொரோனா தொற்று மின்னல் வேகத்தில் உயர்ந்து வருகிறது கடந்த சில நாட்களாக பாதிப்பு இயல்பு நிலைக்கு மாறாக உள்ளதால் கொரோனா வைரஸ் சமூக பரவலாக மாறி இருக்கக் கூடுமோ என்ற அச்சத்தை எழுப்பியுள்ளது , எனவே மத்திய மாநில அரசுகள் உண்மை நிலவரம் என்ன என்பதை மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் என பல தளங்களிலும் கோரிக்கைகள் எழத்தொடங்கியுள்ளன. 

 

click me!