இந்திய பொருளாதாரம் ரொம்ப கவலைக்குரியதாகிவிட்டது !! மன்மோகன் சிங் அதிரடி கருத்து !!

By Selvanayagam PFirst Published Nov 29, 2019, 8:31 PM IST
Highlights

நாட்டின் தற்போதைய பொருளாதாரத்தின் நிலைமை கவலைக்குரியதாக உள்ளது என முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்து உள்ளார்.
 

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், உலகின் மிகச் சிறந்த பொருளாதார நிபுணர். அவரது ஆட்சிக்காலத்தில் இந்திய பொருளாதாரம் ஒரு நிலைத் தன்மையைக் கொண்டிருந்தது. அமெரிக்க பொருளாதாரமே சரிந்தபோதும் இந்திய பொருளாதாரம் நிலையாக இருந்தது. ஆனால் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு இந்திய பொருளாதாரம் கடும் சரிவை சந்தித்துள்ளது.

இது குறித்து  கருத்து தெரிவித்துள்ள  முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், நாட்டின் பொருளாதாரத்தின் நிலைமையை விட சமூகத்தின் நிலை இன்னும் கவலைக்குரியதாக உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

இன்று வெளியிடப்பட்டுள்ள நாட்டின் மொத்த உள்நாட்டு உறபத்தி புள்ளிவிவரங்கள்4.5 ஆக உள்ளது. இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. பொருளாதார வளர்ச்சி 8 முதல் 9 சதவீதமாக வளர வேண்டும். பொருளாதார கொள்கைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் பொருளாதாரத்தை புதுப்பிக்க உதவாது.

பொருளாதார நிலை என்பது அதன் சமூக நிலையின் பிரதிபலிப்பாகும். தற்போதைய சூழ்நிலையை பார்க்கும் போது  பொருளாதார நிலை மிகவும் கவலைக்குரியதாக உள்ளது. என்று மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

click me!