பாக் மீது தாக்குதல் நடத்த இந்தியா முடிவு...? ராஜ்நாத் சிங் தலைமையில் அவரசமாக கூடுகிறது அமைச்சர்கள் குழு...!

By Asianet TamilFirst Published Aug 17, 2019, 3:51 PM IST
Highlights

சூட்டோடு சூடாக பாகிஸ்தானுக்கும் சின்னதக ஒரு ட்ரீட்மெண்ட கொடுத்தால்தான் சரியாக இருக்கும் என்று முடிவு செய்துள்ள பாதுகாப்புத்துறை அமைச்சகம், அதற்கான ஆலோசனையில் இன்று ஈடுபடுகிறது, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராம்நாத் கோவிந்த் இல்லத்தில் இன்று மாலை நடைபெறுள்ள ஆலோசனை கூட்டத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், விவசாயத்துறை அமைச்சர், நரேந்திரசிங் தோமர், உள்ளிட்ட அமைச்சர்கள் கலந்தகொள்கின்றனர்.

பாகிஸ்தான் விவகாரத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் இல்லத்தில் இன்று முக்கிய அமைச்சர்கள் கூடி அலோசனை நடத்துகின்றனர்.

காஷ்மீர் விவகாரத்தை தொடர்ந்து பாகிஸ்தான் இந்தியாவிற்கு எதிராக, பல்வேறு நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது, சீனா ஆதரவுடன்  ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாமீது புகார் தெரிவித்ததுடன், காஷ்மீர் விவகாரத்தை ஒரு சர்வதேச பிரச்சனையாக மாற்ற முயற்ச்சி செய்து அதிலும் தோற்றுப்போயுள்ளது. சீனாவைத்தவிர, ஐநாவில் நிரந்தர உறுப்பு நாடுகளாக உள்ள அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யா,போன்ற நாடுகள் இந்தியாவிற்கு ஆதரவாக பேசியுள்ளனர். இதனால் தோல்வியின் வெறுப்பில் உள்ள பாகிஸ்தான் இந்தியாவை எப்படியாவது பழிதீர்க்க வேண்டும் என கங்கனம்கட்டி வருகிறது .

 

இதனால் தீவிரவாத இயக்கங்களை இந்தியாவுக்கு எதிராக தூண்டிவிட்டு இந்திய எல்லையில் ஊடுறுவ முயற்ச்சிகளை செய்துவருகிறது, அது மட்டுமின்றி காஷ்மீர் விவகாரம் ஆரம்பித்தநாள் முதல் இந்திய ராணுவ துருப்புகளின் மீது, பாகிஸ்தான் இராணுவத்தினர் அடுக்கடி  துப்பாக்கிச்சூடு நடத்துவருகின்றனர், அதற்கு இந்திய இராணுவம் தக்க பதிலடி கொடுத்துவரும் நிலையில், பாகிஸ்தான் இராணுவத்திற்கு  புரியும்படி தக்க பாடம் புகட்டினால்தான் சரிவரும் என இந்திய பாதுகாப்புத்துறை முடிவு செய்துள்ளது

இந்நிலையில் நேற்று , இந்தியாவின்  அணுஆயுத பிரயோகத்தை பொருத்தவரையில் சூழ்நிலைகள்தான் முடிவு செய்யும் என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அதிரடியாக தெரிவித்த கருத்து, சர்வதேர அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது, இந்த நிலையில் சூட்டோடு சூடாக பாகிஸ்தானுக்கும் சின்னதக ஒரு ட்ரீட்மெண்ட கொடுத்தால்தான் சரியாக இருக்கும் என்று முடிவு செய்துள்ள பாதுகாப்புத்துறை அமைச்சகம், அதற்கான ஆலோசனையில் இன்று ஈடுபடுகிறது, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இல்லத்தில் இன்று மாலை நடைபெற உள்ள ஆலோசனை கூட்டத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், விவசாயத்துறை அமைச்சர், நரேந்திரசிங் தோமர், உள்ளிட்ட பல முக்கிய அமைச்சர்கள் கலந்தகொள்கின்றனர்.

click me!