எந்த சூழ்நிலைகளையும் எதிர்கொள்ள இந்திய ராணுவம் தயார்..!! ராணுவ தளபதி அதிரடி..!!

By Ezhilarasan BabuFirst Published Sep 5, 2020, 10:44 AM IST
Highlights

இந்நிலையில் எல்லையில் சீன ராணுவம் கடந்த 29ஆம் தேதி இரவு மீண்டும் அத்துமீறி ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டது மீண்டும் பதட்டத்தை அதிகரிக்கச் செய்துள்ளது.

சீனாவுடனான கருத்துவேறுபாடு பேச்சுவார்த்தையின் மூலம் தீர்க்கப்படும் என இந்திய ராணுவ தளபதி தெரிவித்துள்ளார். சீனாவுடன் தூதரகம் மற்றும் ராணுவ ரீதியான பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அவர் கூறியுள்ளார். கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக  இந்தியா- சீனா இடையே எல்லையில் பதற்றம் நீடித்து வருகிறது. ஜூன் 15ஆம் தேதி இந்திய எல்லையில் சீன ராணுவ படையினர் அத்துமீறி  நுழைந்து நடத்திய வன்முறை தாக்குதலில், 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். அதைத் தொடர்ந்து இரு நாடுகளும் படைகளைக் குவிக்க தொடங்கியதால் எல்லையில் பதற்றம் ஏற்பட்டது. எப்போது வேண்டுமானாலும் போர் வெடிக்கலாம் என்ற சூழல் நிலவியது, அதே நேரத்தில் இரு நாட்டு ராணுவ உயர் அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து இருநாடுகளும் எல்லையிலிருந்து படைகளை பின்வாங்க முடிவு செய்தன. 

இந்நிலையில் எல்லையில் சீன ராணுவம் கடந்த 29ஆம் தேதி இரவு மீண்டும் அத்துமீறி ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டது மீண்டும் பதட்டத்தை அதிகரிக்கச் செய்துள்ளது. பாங்கொங் த்சோ ஏரியின் தெற்குக் கரையில் சீன ராணுவம் அத்துமீறலில் ஈடுபட்ட தாகவும், அதனை இந்திய ராணுவம் முறியடித்ததாகவும் இராணுவம் அறிவித்தது. ஏற்கனவே பங்கோங் த்சோ, வடக்கு கரையில் பிரச்சனை உள்ள நிலையில், தென்கரையில் சீனா மீண்டும் பிரச்சனை செய்து வருவதால் பதற்றம் உருவாகி இருக்கிறது. பதற்றத்தை தணிக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ள இந்திய ராணுவ தளபதி மனோஜ் முகுந்து நரவனே நேற்று லடாக் பகுதிக்கு சென்றார். இரண்டு நாள் பயணமாக அங்கு சென்றுள்ள அவர், நிறைவாக எல்லை பாதுகாப்பு நிலவரங்களை நேரில் ஆய்வு செய்து இராணுவ அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். 

அதேபோல் உண்மையான கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில், சீனப் படைகளை எதிர் கொள்வதற்காக நிறுத்தப்பட்டிருக்கும் படையினரின் தயார் நிலையை ஆய்வு செய்தார். ஆய்வுக்குப் பின்னர் அவர் கூறியதாவது, லே பகுதியில் பல்வேறு இடங்களை நான் ஆய்வு செய்தேன், வீரர்களுடனும் அதிகாரிகளுடனும் பேசினேன், நம் வீரர்களின் மன உறுதி அதிகமாக உள்ளது. இந்திய வீரர்கள் எவ்வித சவால்களையும் எதிர்கொள்ளத் தயார் நிலையில் உள்ளனர். எல்லையில் கடந்த 23 மாதங்களாக பதற்றமான நிலை உள்ளது. பதற்றத்தை தணிக்க சீன ராணுவம் மற்றும் ராஜதந்திர மட்டத்தில் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறோம். எதிர்காலத்திலும் இந்த பேச்சுவார்த்தை தொடரும். பேச்சுவார்த்தையின் மூலம் முடிவு காண முடியும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். எல்லையின் ஸ்திரத் தன்மையை உறுதி செய்வதில் இந்திய ராணுவம் தீவிரமாக உள்ளது என அவர் கூறியுள்ளார்.

 

click me!