பாசிச நாடாக மாறும் இந்தியா.. ட்வீட் போட்டு மோடிக்கு ரிவீட் அடித்த கனிமொழி..!

By vinoth kumarFirst Published Jan 23, 2020, 5:19 PM IST
Highlights

தேர்தல் நடைமுறை மற்றும் பன்முகத்தன்மை அரசின் செயல்பாடு, அரசியல் பங்கேற்பு, அரசியல் கலாசாரம் மற்றும் குடிமக்கள் உரிமைகள் ஆகிய 5 அம்சங்களின் அடிப்படையில் சர்வதேச ஜனநாயக தரக் குறியீடு பட்டியல் தயாரிக்கப்படுகிறது. உலக நாடுகளில் ஜனநாயகத்தின் நிலை குறித்து ஆண்டுதோறும் தி எகனாமிஸ்ட் இன்டலிஜென்ஸ் யூனிட் தரக்குறியீட்டை வெளியிட்டு வருகிறது.  

வலிமையான ஜனநாயக நாடாக இருந்த இந்தியா ஒரு பாசிச நாடாக மாற்றப்பட்டு வருகிறது என்று திமுக எம்.பி. கனிமொழி குற்றம்சாட்டியுள்ளார். 

தேர்தல் நடைமுறை மற்றும் பன்முகத்தன்மை அரசின் செயல்பாடு, அரசியல் பங்கேற்பு, அரசியல் கலாசாரம் மற்றும் குடிமக்கள் உரிமைகள் ஆகிய 5 அம்சங்களின் அடிப்படையில் சர்வதேச ஜனநாயக தரக் குறியீடு பட்டியல் தயாரிக்கப்படுகிறது. உலக நாடுகளில் ஜனநாயகத்தின் நிலை குறித்து ஆண்டுதோறும் தி எகனாமிஸ்ட் இன்டலிஜென்ஸ் யூனிட் தரக்குறியீட்டை வெளியிட்டு வருகிறது.  

அதில் கடந்த ஆண்டு 41-வது இடத்தில் இருந்த இந்தியா, இந்த முறை 10 இடங்கள் பின்தங்கி 51-வது இடத்தில் இருக்கிறது. குடிமக்கள் உரிமையில் ஏற்பட்ட சறுக்கலே இதற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில். இதுதொடர்பாக திமுக எம்.பி.கனிமொழி டுவிட்டர் பக்கத்தில்:- உலக ஜனநாயக குறியீட்டில், இந்தியா ஒரே ஆண்டில் 10 இடங்கள் கீழிறங்கியிருப்பது, இந்தியாவில் உரிமைகள் எப்படி பறிக்கப்பட்டு வருகின்றன என்பதை உணர்த்துகிறது.  ஒரு வலிமையான ஜனநாயக நாடாக இருந்த இந்தியா ஒரு பாசிச நாடாக மாற்றப்பட்டு வருகிறது என ஆவேசமாக பதிவிட்டுள்ளார்.

click me!