இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 5 சதவீதமாக சரிவு ! உற்பத்தி துறையிலும் பெரும் சரிவு ! மத்திய புள்ளியியல் துறை அதிர்ச்சி தகவல் !!

By Selvanayagam PFirst Published Aug 30, 2019, 9:13 PM IST
Highlights

2019 ஏப்ரல் முதல் ஜுன் வரையிலான  முதல் காலாண்டில் பொருளாதார வளர்ச்சி விகிதம் 5% ஆக சரிவடைந்துள்ளது. இந்த சரிவு இந்திய பொருளாதார வல்லுநர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய புள்ளியியல் துறை பொருளாதார வளர்ச்சி விகிதம் பற்றிய விவரங்களை வெளியிட்டுள்ளது. அதில் கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உற்பத்தி துறையில் சரிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் 2019-20 ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சியான ( ஜிடிபி ) 5% ஆக குறைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த காலாண்டில் ஜிடிபி வளர்ச்சி 5.8 சதவிதமாக இருந்த நிலையில், தற்போது 5% ஆக சரிந்துள்ளது. ரிசர்வ் வங்கி 2020-ம் ஆண்டின் முதல் பாதியில் ஜிடிபி வளர்ச்சியை 6.9% உயர்த்த திட்டமிட்டிருந்தது. அத்துடன் இரண்டாம் பாதியில் 7.3 முதல் 7.5% உயர்த்தவும் திட்டம் வகுத்திருந்தது.

விவசாயத்துறையில் உற்பத்தி குறைந்தது, உற்பத்தி மற்றும் கட்டுமானத் துறையில் நிலவும் சரிவு, இதற்கு முக்கியமான காரணமாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், இரு வாரங்களாக புதிதாக பட்ஜெட் அறிவிப்பு போல பல நிதி நிலை அறிவிப்புகளை பத்திரிக்கையாளர்களை சந்தித்து அறிவித்து வருகிறார். இதற்கு பலன் கிடைக்குமா என்பதை அடுத்த காலாண்டு இறுதியில் தான் பார்க்க வேண்டும்.

click me!