சென்னைக்கு திரும்புவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு..!! அடையாளம் கண்டு தனிமைப்படுத்தும் பணி தீவிரம்..!!

By Ezhilarasan BabuFirst Published Aug 20, 2020, 9:36 AM IST
Highlights

நேற்று ஒரே நாளில் மட்டும் 18,853 மனுக்கள் பெறப்பட்டு 18,123 நபர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த பயண அனுமதி பெற்று வரும்  நபர்களை கண்காணித்து, அவர்களை தனிமைப்படுத்தி கண்காணிக்கும் பணிகளைத் தீவிரமாக மேற்கொள்ள வேண்டும்.

வெளி மாநிலங்கள் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்தும் பணிகளை தீவிரப்படுத்த நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை தலைமைச் செயலாளர் திரு ஹர்மந்தர் சிங் உத்தரவிட்டுள்ளார்.

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 7, 8, 10, 11 மற்றும் 13 ஆகிய மண்டலங்களில் மேற்கொள்ளப்பட்டுவரும் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர்  ஹர்மந்த் சிங் தலைமையில் நடைபெற்றது.  அப்போது அவர் தெரிவித்ததாவது:- மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் காய்ச்சல் சிறப்பு முகாம்கள், வீடுகள் தோறும் சென்று கொரோனா அறிகுறி உள்ளவர்கள் கண்டறிதல் போன்ற பரிசோதனைகளை அதிகரித்தல் போன்ற நடவடிக்கைகளின் மூலம் தொற்று உள்ள நபர்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு தேவையான சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும் இவர்களோடு தொடர்பில் இருந்த நபர்கள் கண்டறியப்பட்டு தனிமைப் படுத்தப்படுகின்றனர். இதனால் சமீபகாலமாக சென்னையில் வைரஸ் தொற்று பரவுதல் வெகுவாக குறைந்துள்ளது. 

அதேபோல் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் வைரஸ் தொற்று பரவுதலை தடுக்கும் வகையில் பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் அவசர தேவைக்காக வழங்கப்பட்டு வந்த இ-பாஸ் அறிவிக்கப்பட்டு தகுந்த காரணங்கள் இருப்பின் உடனடியாக வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இனிவரும் காலங்களில் சென்னையை நோக்கி வரும் நபர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும், குறிப்பாக நேற்று ஒரே நாளில் மட்டும் 18,853 மனுக்கள் பெறப்பட்டு 18,123 நபர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த பயண அனுமதி பெற்று வரும்  நபர்களை கண்காணித்து, அவர்களை தனிமைப்படுத்தி கண்காணிக்கும் பணிகளைத் தீவிரமாக மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக தொழிற்சாலை மற்றும் இதர அலுவலகங்களில் வேலை காரணமாக வரும் நபர்களின் தகவல்களை அந்தந்த மண்டல அலுவலர்கள் சேகரித்து சம்பந்தப்பட்ட மாநகராட்சி அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதை உறுதி  செய்ய வேண்டும்.  

கோடம்பாக்கம் மற்றும் வளசரவாக்கம் மண்டலங்களில் வியாபார ரீதியாக வெளி மாவட்டங்களுக்கு சென்று வரும் நபர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். அதேபோன்று அம்பத்தூர் மண்டலம், கிண்டி தொழிற்பேட்டை அமைந்துள்ள அடையாறு மண்டலம், ஆகியவற்றின் தொழிற்சாலைகள் அதிகம் இருப்பதால் வெளிமாநில தொழிலாளர்கள் வருகையும்  அதிகரிக்கும், இது தொடர்பான தகவல்களை சேகரித்து அவர்களை முறையாக தனிமைப்படுத்த வேண்டும். கொரோனா வைரஸ் தொற்று பாதித்த பகுதிகளில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ள இடங்களில், மாநகராட்சியின் வழிமுறைகளை பின்பற்றாத நபர்களின் மீதும் வெளியிடங்களுக்கு வரும்போதும் முகக்கவசம் அணியாதவர்கள், மேலும் சமூக இடைவெளியை பின்பற்றாத வணிக நிறுவனங்கள் மற்றும் அலுவலர்களின் மீதும் காவல்துறை உதவியுடன் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என ஹர்மந்தர் சிங் தெரிவித்தார்.
 

click me!