காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தானில் தலித் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரிப்பு: போராட்டத்தில் குதித்த பாஜக

By Ezhilarasan BabuFirst Published Oct 5, 2020, 1:41 PM IST
Highlights

பாதிக்கப்பட்டவர்களின் கண்களிலிருந்து வடியும் கண்ணீரை துடைக்க அனைத்துக் கட்சித் தலைவர்களும் மாவட்ட தலைமையகத்தில் பெருமளவில் ஆர்ப்பாட்டம் செய்ய முன்வர வேண்டும் என பூனியா அழைப்பு விடுத்தார். 

ராஜஸ்தான் மாநிலத்தில் பெண்கள் மற்றும் சிறார்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாக கூறி அம்மாநில அரசுக்கு எதிராக அம்மாநில பாஜக சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றது. அக்டோபர்-5ஆம் தேதி முதல்  மாநில தலைமையகத்தில் ஹல்லா போல் போராட்டத்தை அம்மாநில பாஜக நடத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் விரைவில் ஆளுநர் தலையிட வேண்டும் எனவும் அப்போது வலியுறுத்தப்பட்டது. 

நாடு முழுவதும் பெண்கள் மற்றும் சிறார்களுக்கு எதிரான குற்றங்கள் பன்மடங்கு அதிகரித்துள்ளது. தேசிய அளவில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் தான் அதிக அளவில் தலித் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடந்திருப்பதாக தேசிய குற்றப்பதிவு ஆணையம் வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் தெரியவந்துள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டில் பதிவான பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள் குறித்த புள்ளிவிவரங்களை தேசிய குற்றப்பதிவு ஆணையம் வெளியிட்டுள்ளது. அதில் 2018 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2019 ஆம் ஆண்டில் பெண்களுக்கு எதிராக 7.3% குற்ற வழக்குகள் பதிவாகி இருப்பதாக தெரியவந்துள்ளது. 2018 ஆம் ஆண்டில்  3,78,236 வாழ்க்கைகள் பதிவாகியுள்ளது. இதுவே 2019 ஆம் ஆண்டில் 4 லட்சமாக பதிவாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2010 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் தலித் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 2019  இல் 7.3 சதவீதம் அதிகரித்துள்ளது. இதுவே தாழ்த்தப்பட்ட பழங்குடிகளுக்கு எதிராக 26 சதவீதமாக அதிகரித்துள்ளது. தலித்துகளுக்கு எதிராக பதிவாகியிருக்கும் மொத்தம் வழக்குகளில் உத்தரபிரதேச மாநிலத்தில் மட்டும் அதிகபட்சமாக 11, 829 வாழ்க்கைகள் பதிவாகி இருக்கிறது. அதற்கு அடுத்த இடத்தில் ராஜஸ்தானில் 6,794 வழக்குகளும், பீகாரின் 1,544 வழக்குகளும் பதிவாகியுள்ளன. 

இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் தலித்துகள் மற்றும் பெண்களுக்கு எதிராக குற்றங்கள் அதிகரித்து விட்டதாக மாநில ஆளுநரிடம் ஏற்கனவே பாஜக புகார் அளித்துள்ளது. அதாவது, கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலம்  அல்வாரியில், கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற தலித் பெண் கடத்தி செல்லப்பட்டு கணவன் முன்னிலையிலேயே பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த சம்பவத்தை தொடர்ந்து காவல் துறையிடம் அப்பெண்ணின் கணவர் புகார் அளித்தும், அதில் நடவடிக்கை இல்லை. அதையடுத்து அம்மாநில பாஜக இதில் தலையிட்டு பின்னர் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் என்.சி.ஆர்.பி தரவுகளின்படி கற்பழிப்பு வழக்குகளில் ராஜஸ்தான் முதலிடத்தில் உள்ளது. இது ஒரு ஆபத்தான சூழ்நிலை என்றும், கற்பழிப்பு மற்றும் குற்ற நடவடிக்கைகளை தடுப்பதில் மாநில  முதலமைச்சர் தவறிவிட்டார் எனவும், ராஜஸ்தான் பெண்களுக்கு எதிரான அட்டூழியங்களில் மையமாக மாறி வருகிறது என்றும் அம்மாநில பாஜக தலைவர் பூனியா குற்றம்சாட்டியுள்ளார். 

ராஜஸ்தானில் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை அதிகரித்திருப்பதை கண்டித்து மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதாவது கற்பழிப்பு வழக்குகளில் ராஜஸ்தான் நாட்டில் முதலிடத்திலும் குற்றவியல் விஷயத்தில் இரண்டாவது இடத்திலும் இருப்பதாக மாநில தலைவர் சதீஷ் பூனியா குற்றம் சாட்டினார். பாஜக மாநில தலைவர் சதீஷ் பூனியா தலைமையில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை எதிர்த்து ஜெய்பூரில் ஆர்பாட்டம் நடைபெற்றது. அதில் ஏராளமானோர் ஈடுபட்டனர். அப்போது பேசிய அவர்,  ஆளுநரை சந்திக்க நாங்கள் நேரம் கோரியுள்ளோம். இன்னும் ஓரிரு நாட்களில் அவரை நாங்கள் சந்திப்போம். மொத்தத்தில் ராஜஸ்தான் மாநிலத்திற்கு இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது,  தலித் பெண்கள் சுரண்டலுக்கான இடமாக ராஜஸ்தான் மாறியுள்ளது. தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள இந்த புள்ளி விவரத்தை பார்த்தாவது, இந்த விவகாரத்தில் தலையிடுமாறு ஆளுனரிடம் கோரிக்கை விடுக்கிறோம். அதேபோல் பாதிக்கப்பட்டவர்களின் கண்களிலிருந்து வடியும் கண்ணீரை துடைக்க அனைத்துக் கட்சித் தலைவர்களும் மாவட்ட தலைமையகத்தில் பெருமளவில் ஆர்ப்பாட்டம் செய்ய முன்வர வேண்டும் என பூனியா அழைப்பு விடுத்தார். 

மாநிலத்தில்  பாதிக்கப்பட்ட பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், அசோக் கெலாட் அரசாங்கம் அவர்களின் அழுகைக்கு செவிசாய்க்கவில்லை. குற்றச் சம்பவங்களின் மையமாக மாறிவரும் ராஜஸ்தான் குறித்து பாஜக ட்விட்டரில் பிரச்சாரத்தை தொடங்கும் என பூனையை எச்சரித்தார். அதேபோல் குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகள் எந்த வித அச்சமுமின்றி நடமாடுகின்றனர் எனவும், இது அரசியல் ரீதியான குற்றச்சாட்டு அல்ல தேசிய குற்றவியல் ஆவணக் காப்பகத்தின் புள்ளிவிவரங்களின் அடிப்படையிலானது என அவர் கூறினார். 

 

click me!