
ஜெயா தொலைக்காட்சி, நமது எம்.ஜி.ஆர் பத்திரிக்கை அலுவலகம் மட்டுமல்லாமல் இளவரசி மகன் விவேக் ஜெயராமன் வீடு, பெங்களூருவில் உள்ள டி.டி.வி.தினகரனின் தீவிர ஆதரவாளர் புகழேந்தியின் வீடு உள்ளிட்ட 10 இடக்ளில் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று அதிகாலை முதல் ஜெயா தொலைக்காட்சி, நமது எம்.ஜி.ஆர். பத்திரிக்கை அலுவலகம் உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
அதிமுக இரண்டாக உடைந்ததையடுத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் டி.டி.வி.தினகரன் என இரு அணிகளாக பிரிந்து செயல்பட்டு வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜகவுக்கு இபிஎஸ்ம், ஓபிஎஸ்ம் நெருக்கமாக இருந்து வரும் நிலையில், இரட்டை இலை சின்னம் அவர்களுக்கு கிடைப்பதில் டி.டி.வி.தினகரன் கடும் குடைச்சல் கொடுத்து வருகிறார்.
இந்நிலையில் டி.டி.வி.தினகரன் தொடர்பாக அனைத்து நிறுவனங்கள் மற்றும் அவரது உறவினர்களின் வீடுகளில் இன்றுவருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
இன்று அதிகாலை முதல் ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள ஜெயா தொலைக்காட்சி அலுவலகம், நமது எம்,ஜி,ஆர், பத்திரிக்கை அலுவலகம், வேளச்சேரி பீனிக்ஸ் மாலில் உள்ள ஜாஸ் சினிமாஸ், ஜெயா தொலைக்காட்சியின் நிர்வாக இயக்குநர் மற்றும் இளவரசியின் மகன் விவேக்கின் இல்லம், பெங்களுருவில் உள்ள டி.டி.வி.தினகரனின் தீவிர ஆதரவாளர் புகழேந்தியின் வீடு, தியாகராய நகரில் உள்ள இளவரசியின் மகள் கிருஷ்ணப்பிரியாவின் வீடு உள்ளிட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
மேலும் மன்னார்குடியை அடுத்த சுந்தரக் கோட்டையில் உள்ள சசிகலாவின் சகோதரர் திவாகரனின் இல்லம், டி.டி.வி.திகனரனின் இல்லம், திருவாரூர் மாவட்ட அதிமுக அம்மா அணி செயலாளர் காமராஜ் இல்லம் உட்பட 10 க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.