முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை

 
Published : Jan 13, 2018, 09:48 AM ISTUpdated : Sep 19, 2018, 01:49 AM IST
முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை

சுருக்கம்

income tax raid in ex finance minister chidambaram house

முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னை நுங்கம்பாக்கம் ஹாடோஸ் சாலையில் உள்ள வீட்டில் ப.சிதம்பரம் வசித்துவருகிறார். அந்த வீட்டில் தான் அவரது மகன் கார்த்திக் சிதம்பரமும் வசித்து வருகிறார்.

இந்நிலையில், இன்று காலை 7.30 மணியிலிருந்து ப.சிதம்பரத்தின் நுங்கம்பாக்கம் வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். 

2006-ம் ஆண்டு மத்திய நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரம், அப்போது ஏர்செல் நிறுவனத்தில் மேக்சிஸ் நிறுவனம் ரூ. 5,000 கோடியை முதலீடு செய்வதற்கு சட்ட விரோதமாக ஒப்புதல் அளித்ததாகக் கூறப்படுகிறது. ஏர்செல் - மேக்சிஸ் விவகாரம் தொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை தனித்தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.

ஏர்செல் நிறுவனத்தில் மேக்சிஸ் நிறுவனம் முதலீடு செய்ய, வெளிநாட்டு முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் ஒப்புதல் பெறுவதற்காக, ‘அட்வான்டேஜ் ஸ்ட்ரேட்டஜிக் கன்சல்டிங்’ நிறுவனம் உதவி செய்துள்ளது. இதற்காக இந்த நிறுவனத்துக்கு ஒரு தொகை கட்டணமாக வழங்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் கார்த்தி சிதம்பரத்தின் பினாமி நிறுவனம் என்று கூறப்படுகிறது.

ஏர்செல் - மேக்சிஸ் முறைகேடு வழக்கில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை செய்தது தொடர்பாக கடந்த ஆண்டு டிசம்பர் ஒன்றாம் தேதி ப.சிதம்பரம் மற்றும் அவரது உறவினர்களின் வீடுகளில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர்.

இந்நிலையில், இன்று மீண்டும் சென்னையில் உள்ள சிதம்பரத்தின் வீட்டில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. எனினும் தற்போது நடக்கும் சோதனையின் காரணம் குறித்த தகவல்கள் தெரியவில்லை.

PREV
click me!

Recommended Stories

விஜய்யும், சீமானும் பாஜக பெற்றெடுத்த பிள்ளைகள்.. மதுரையில் திருமா பரபரப்பு பேச்சு
ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!